காரைக்கால் பெண்கள் அரபிக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

Share this News:

காரைக்கால் (21 டிச 2020): காரைக்கால் அல் ஃபலாஹ் பெண்கள் அரபி கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டமளிப்பு நிகழ்ச்சி மார்க்க அறிஞர் மெளலவி யூசுப் S.P நினைவரங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மௌலவி S. முஹம்மது இத்ரீஸ் நஜாஹி அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். ஆலிமா M.S. ஷரீஃபா ஹன்னோம் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.

மாண்புமிகு மாவட்ட உரிமையியல் நீதிபதி (மயிலாடுதுறை) சகோதரி B. ரிஸானா பர்வீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தி மாணவிகள் அனைவருக்கும் ஆலிமா சான்றிதழ் வழங்கினார்கள்.

ஆலிமா ஜமீலா பின்த் லெப்பை அவர்கள் மாணவிகள் அனைவருக்கும் அல் குர்ஆன் மற்றும் ஹதீஸ் புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். மொத்தம் 40 மாணவிகள் ஆலிமா சான்றிதழ் பெற்றனர். மாணவிகள் அனைவரும் தங்கள் மார்க்கத்திறனை வெளிப்படுத்தி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

அல் ஃபலாஹ் ஆசிரியைகள் ஆலிமா ஃபாத்திமா கனி, ஆலிமா ஃபாத்திமா ஷாம், ஆலிமா ஷிஃபானா, ஆலிமா சஃப்ரின் மர்சுகா, ஆலிமா ஷரீஃபா ஹன்னோம், ஆலிமா ரம்ஜான் மற்றும் ஹாஸ்டல் வார்டன் ரம்ஜான் பேகம் ஆகிய அனைவருக்கும் நினைவு பரிசுகள் பரிசுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சிகளை ஆலிமா M.சஃப்ரின் மர்சுகா அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.


Share this News:

Leave a Reply