பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டாக்டர் ரஜினிகாந்த் கைது!

கரூர் (17 நவ 2021): கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்தை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் தாய், கரூா் அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளித்திருந்தாா். இந்த புகாரின்பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் மற்றும் அவரது மேலாளா் சரவணன் ஆகியோா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவா்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், மருத்துவர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் இன்று கைது செய்துள்ளார். பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு, தொடர்கதையாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply