எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் வார்டில் திமுக வெற்றி!

சேலம் (22 பிப் 2022): முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசிக்கும் சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 23வது வார்டில் திமுக வெற்றி பெற்றுள்ளது அதிமுகவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் மேற்கு மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அந்த வார்டில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply