இன்றைய கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் சீஃப் கெஸ்ட் இவங்கதான்!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி முதல்வராக மூன்றாவது முறையாக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் முக்கிய பிரமுகராக இணையத்தை கலக்கிய பேபிமப்ளர் மேனுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

டெல்லியில் பல கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து கெஜ்ரிவால், மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். 70 தொகுதிகளில் 62ஐ கைபற்றி சாதனை படைத்தார். பாஜகவின் மக்கள் விரோத பிரச்சாரம் டெல்லியில் பலிக்கவில்லை. காங்கிரஸ் அனைத்து இடங்களையும் இழந்தது.

மக்கள் முதல்வர் என்று அழைக்கப் பட்ட கெஜ்ரிவால் அதற்கேற்ற வகையில் ஏழைகள், பெண்களைக் கவரும் வகையில், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, மக்கள் மனங்களை வென்றார் .

இந்நிலையில் இன்று (16.2.2020 ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி ராம்லீலா மைதானத்தில் கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. மதியம் 12.15 மணியளவில் அவர் டெல்லி முதல் அமைச்சராகப் பதவியேற்றுக் கொள்கிறார். விழாவில் துப்புரவுத் தொழிலாளி, டாக்டர்கள், பஸ் டிரைவர், ஆட்டோ டிரைவர், இன்ஜினீயர், ஆர்கிடெக், பஸ் கண்டக்டர்கள், தீயணைப்புத்துறை வீரர்கள், ஆசிரியர்கள், பியூன்கள் எனச் சமுகத்தின் பல மட்ட சாமானிய மக்களும் பங்கேற்கின்றனர். இதில், ஸ்பெஷலாக பேபிமப்ளர் மேனுக்கும் அழைப்பு போயிருக்கிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *