ட்ரெண்டிங்கில் சென்னை ஷஹீன்பாக் – வீதிக்கு வாங்க ரஜினி!

Share this News:

சென்னை (15 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் தாக்குதலை அடுத்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னை ஷஹீன் பாக், வீதிக்கு வாங்க ரஜினி முன்னணியில் உள்ளன.

சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று அமைதி வழியில் தொடர் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்த நிலையில் அவர்கள் மீது காவல்துறை கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. சென்னை மாநகர காவல்துறையின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாக உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது.

மேலும் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் சென்னை போராட்டம் முன்னணியில் உள்ளது. குறிப்பாக ரஜினி சிஏஏவை ஆதரித்து பேசும்போது, முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் முதலில் நான் நிற்பேன் என்றார். ஆனால் நேற்றைய போலீஸ் தாக்குதலில் முஸ்லிம் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் ரஜினியிடமிருந்து ஒரு கண்டனக் குரல் கூட வரவில்லை.

இந்நிலையில் ட்விட்டரில் ‘வீதிக்கு வாங்க ரஜினி’, ‘சென்னை ஷஹீன் பாக்’ ஆகியவை முன்னணியில் உள்ளன.


Share this News:

Leave a Reply