இறந்துட்டதா சொன்னாங்க ஆனால் இதயம் துடிக்குது – தேனி மருத்துவமனையில் பரபரப்பு!

தேனி (04 ஜூலை 2021): தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் குழந்தை உயிருடன் இருந்தது பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம், தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த பிளவேல்ராஜா-ஆரோக்யமெரி தம்பதியினருக்கு மூன்றாவதாக குழந்தை பிறந்திருக்கிறது. ஆறுமாத குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை நிர்வாகம் தரப்பு இறப்பு சான்றிதழுடன் குழந்தையின் உடலையும் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளது. சான்றிதழுடன் குழந்தையை மயானத்திற்கு தூக்கிச் சென்ற போது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது கானாவழக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இது மருத்துவமனையின் மிகப்பெரிய அலட்சியப்போக்கு என்ற எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply