தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

Share this News:

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் சின்னமான ‘பட்டம்’ சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.


Share this News:

Leave a Reply