டெல்லியில் 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள உவைசி கட்சி!

புதுடெல்லி (28 நவ 2022): டெல்லி மாநகராட்சி தேர்தலில் டெல்லியின் வெவ்வேறு சட்டமன்ற வார்டுகளில் AIMIM தனது 15 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தேசிய தலைநகரில் தனது கட்சியின் பொது பேரணிகளில் உரையாற்றிய அசாதுதீன் ஒவைசி, இங்குள்ள பல பகுதிகள் வளர்ச்சியடையவில்லை என்று கூறினார். மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் ஒவைசி கடுமையாக தாக்கிப் பேசினார். மேலும் டெல்லியின் வளர்ச்சிக்காக யாரும் உழைக்கவில்லை என்றும் முந்தைய அரசுகளை கடுமையாக சாடினார்.

மேலும்...

தமிழகத்தில் உவைஸி கட்சி வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு!

சென்னை (15 மார்ச் 2021): தமிழகத்தில் அ ம.மு.க. கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் (AIMIM) கட்சிக்கு 3 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது இறுதி செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி சார்பில் போட்டியிடும் 3 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் வக்கீல் அஹமத், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் அமீனுல்லா…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் – ஒவைசியின் மாணவர் பிரிவு உறுதி!

புதுடெல்லி (12 பிப் 2021): ஒவைசியின் AIMIM கட்சி ஒரு மாணவர் பிரிவை உருவாக்கி, பல்கலைக்கழக அரசியல் மற்றும் நாட்டில் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலகாபாத் பல்கலைக்கழக யூனியன் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் மாணவர் பிரிவு போட்டியிடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவர் பிரிவு உருவாக்கப்பட்டது. உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி…

மேலும்...

லாக்டவுன் காலத்தில் சாதித்த மாணவி ஆமினா முஹம்மது – வீடியோ இணைப்பு!

ஜித்தா (15 ஜன 2021): புனித நூலான திரு குர்ஆனின் எழுத்துக்களையும் மக்காவின் (கஃபா) கிஸ்வா அரபி எழுத்துக்களையும் வனப்பெழுத்து (Calligraphy) மூலம் வடிவமைத்து சாதித்துள்ளார் மாணவி ஆமினா முஹம்மது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமினா முகமது, சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஓவியம் எதுவும் முறையாக பயிலாத நிலையில் கோவிட் காலத்தின் லாக்டவுன் நேரத்தில்தான் அமீனா யூடியூப் மூலம் அரபி மொழியின் வனப்பெழுத்து (Calligraphy) வரைவதை…

மேலும்...

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் அசாதுத்தீன் உவைசி!

ஐதராபாத் (15 டிச 2020): தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க அசாதுத்தீன் உவைசி பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க்க ஒரு சக்தியாக உருவெடுத்த பிறகு, அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சி தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது. 2021 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் 25 இடங்களுக்கும் குறையாமல் AIMIM போட்டியிட வாய்ப்புள்ளது…

மேலும்...

பீகாரில் 32 இடங்களில் போட்டியிடும் அசாதுத்தீன் உவைசி கட்சி!

ஐதராபாத் (10 ஜூன் 2020): ஐதராபாத் எம்பி அசாதுத்தீன் உவைசி தலைமையிலான AIMIM கட்சி, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களுக்கு போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது. AIMIM கட்சி பீகார் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் கிஷன்கஞ்ச் தொகுதியை வென்ற கம்ருல் ஹுதா என்ற எம்.எல்.ஏ. வை தொடர்ந்து பீகாரில் மேலும் கட்சியை விரிவு படுத்த உவைசி கட்சி முன்வந்துள்ளது. இதுகுறித்து பீகார் எய்ஐஎம் தலைவர்…

மேலும்...