சசிகலா பின்னால் 50 எம்எல்ஏக்கள் – பீதியில் எடப்பாடி தரப்பு!

Share this News:

சென்னை (04 பிப் 2021): சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலாவுக்கு 50 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக தினகரன் தரப்பு தெரிவித்து வருகிறது.

பெங்களூரில் தங்கியிருக்கும் சசிகலா பிப்ரவரி 8ஆம் தேதி தமிழகம் வருகைதரவிருக்கிறார். அவருக்கு 50 எம்எல்ஏக்களும் ஆறு அமைச்சர்களும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை மெரினாவில் கடலே தெரியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலைமோதப் போவதாக தினகரன் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் கொங்கு மண்டல எம்எல்ஏ ஒருவர் 50 லட்சம் ரூபாய் வெள்ளி வாள் பரிசளிக்கஉள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சசிகலா மருத்துவமனையிலிருந்து ஜெயலலிதாவின் காரில் , அதிமுக கொடியுடன் பயணித்ததால், சசிகலாஅதிமுகவைக் கைப்பற்றுவார் என்பதாகவே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply