தமிழக வீரர் ஷாருக்கானுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்!

அஹமதாபாத் (06 பிப் 2022) இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷாரூக்கான் சேர்க்கப் பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஷாருக்கான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் 3 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இப்போது முதலாவது ஒரு நாள் போட்டிக்கான இந்திய பிசிசிஐ அணியில் ஷாருக்கான் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்…

மேலும்...

இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு – ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக!

சென்னை (30 ஜன 2022): இது தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று முரசொலி தமிழக ஆளுநருக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “ நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை”…

மேலும்...

ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம்…

மேலும்...

ஒன்றிய அரசு நிராகரித்த ஊர்திகள் சென்னையில் அணிவகுப்பு!

சென்னை (26 ஜன 2022): 73-வது குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியேற்றும்போது, விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன கவர்னர் ஆர்.என்.ரவி, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து டெல்லி அணிவகுப்பிற்கு உருவாக்கப்பட்டு ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்தி உள்பட 4 ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பு ஊர்திகளில் வேலுநாச்சியார்,…

மேலும்...

ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர். அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,…

மேலும்...

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு- புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் இரவு நேர முழு ஊ ரடங்கிற்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள்,…

மேலும்...

தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்கிரான் பாதிப்பு – அமைச்சர் தகவல்!

சென்னை (23 டிச 2021): தமிழகத்தில் மேலும் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்முலம் தமிழகம் இந்திய அளவில் 3வது இடத்தில் உள்ளது. ஏற்கெனவே நைஜீரியாவில் இருந்துவந்த ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதியாகியிருந்தது. ஆனால் தற்போது தமிழகத்தில் 34 ஆக அதிகரித்துள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்டவர்களில் 60 பேருக்கு முடிவுகள் வந்துள்ளன; அதில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானது. இன்னும் 24 பேருக்கான ஒமிக்ரான் முடிவு வரவேண்டியுள்ளதாகவும் அமைச்சர்…

மேலும்...

தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு?

சென்னை (16 டிச 2021): தமிழகத்தில் மேலும் 4 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்திய அறிகுறி இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். சென்னை வளசரவாக்கத்தில் ஒருவருக்கு நேற்று ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவருடன் தொடர்புடைய மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, ஒரே இடத்திலிருந்து 11 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இந்த மரபணு மாற்றமடைந்த கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியை தீவிரமாக செய்து வருகிறோம்…

மேலும்...

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்ல தடை!

சென்னை (14 டிச 2021): கொரோனா நோய் தடுப்பு தொடர்பான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15-ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில், பண்டிகைக் காலங்களில் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸை கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க…

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (13 டிச 2021): தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 13.12.2021, 14.12.2021 கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 15.12.2021, 16.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான…

மேலும்...