இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள…

மேலும்...

பாஜக அரசு அடிமை அரசாகிவிட்டது – சிவசேனா கடும் விமர்சனம்!

மும்பை (17 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகைக்காக, மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் அனைத்தும் அடிமைத்தனத்தின் வெளிப்பாடு என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இதுகுறித்து வெளியாகியுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையால், குடிசைகளை மறைக்க சுவர் எழுப்புவது உள்ளிட்ட முன்னேற்பாடுகள் அனைத்தும் இந்தியாவின் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகவே உள்ளது. ட்ரம்ப் வருகையால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வீழ்ச்சியில் மாற்றம் ஏற்படப்போவதும் இல்லை, புதிதாகக் கட்டப்படும் சுவருக்குப்…

மேலும்...

டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிவசேனா ஆதரவு!

புதுடெல்லி (07 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்து சிவசேனா கருத்து வெளியிட்டுள்ளது. டெல்லியில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவாலை ஆதரித்து சிவசேனா கருத்து கூறி உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், டில்லி வளர்ச்சிக்காக பணியாற்றிவர் கெஜ்ரிவால். டில்லியை முன்மாதிரி மாநிலமாக மாற்றியவர் கெஜ்ரிவால் என கெஜ்ரிவாலை புகழ்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளது. பாஜக…

மேலும்...

தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா கொடுத்துப்பாருங்கள் – பாஜகவை மிரட்டும் சிவசேனா!

புதுடெல்லி (04 பிப் 2020): மத்திய அரசுக்கு தைரியமிருந்தால் சாவர்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்துப்பாருங்கள் என்று சிவசேனா எம்பி விநாயக் ரௌத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய சிவசேனை எம்பி விநாயக் ரௌத் , “உங்களுக்கு தைரியம் இருந்தால், சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்குங்கள். தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) சிவசேனை எதிர்க்கும். நீங்கள் எங்களுக்கு ஹிந்துத்வாவை கற்றுத் தர வேண்டாம். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், பெண்களுக்கு…

மேலும்...

பாஜக மீது விசாரணை – உத்தவ் தாக்கரே உத்தரவு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் பேச்சுக்கள் ஓட்டுக் கேட்கப் பட்ட டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் தெரிவித்தார். இது மகாராஷ்டிர அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த,…

மேலும்...

போன் ஒட்டுக்கேட்பு – பாஜக அரசு மீது சிவசேனா தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு!

மும்பை (24 ஜன 2020): முந்தைய பாஜக ஆட்சியில் நான் உட்பட பல தலைவர்களின் போன் ஓட்டுக் கேட்கப் பட்டுள்ளது என்று , சிவசேனா மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மஹாராஷ்டிராவில், கடந்த, அக்டோபரில் நடந்த சட்டபை தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் ஏ்றபட்டது. தேர்தலுக்குப் பின், பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில், முக்கிய பங்காற்றினேன். அப்போது, எனது போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டன. இதை,…

மேலும்...

மோடி அமித் ஷா விருப்பம் நிறைவேறுகிறது – சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை (08 ஜன 2020) மாணவர்கள் மீதான வன்முறை சம்பவத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் விரும்பியது நடந்து கொண்டு இருக்கிறது என்று சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்தது. மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை நினைவுபடுத்துகிறது என அக்கட்சியின் தலைவரும், மராட்டிய முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்தநிலையில், இந்த சம்பவத்தில் பிரதமர்…

மேலும்...