கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து சவூதி அணியின் கேப்டன் விலகல்!

தோஹா (28 நவ 2022): கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து காயம் காரணமாக சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் விலகியுள்ளார். கத்தாரில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் சவூதி அணியின் கேப்டன் சல்மான் அல்-ஃபராஜ் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை காரணமாக போட்டியிலிருந்து விலக்கப் பட்டுள்ளார். சல்மான் அல்-ஃபராஜ் தொடர்ந்து விளையாட முடியாது என்கிற மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அவர் உலகக் கோப்பை போட்டியிலிருந்து…

மேலும்...

சவூதியில் பினாமி பரிவர்த்தனை நிறுவனங்களுக்கு வர்த்தக அமைச்சகம் எச்சரிக்கை!

ரியாத் (28 நவ 2022): சவூதியில் பினாமி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்றரை லட்சம் நிறுவனங்கள் தங்கள் நிலையை சரி செய்யுமாறு வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வுகளின் போது பினாமி பரிவர்த்தனைக்கான அறிகுறிகளைக் கண்டறிந்த நிறுவனங்களுக்கு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் பினாமி பரிவர்த்தனைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள், 3.5 லட்சம் நிறுவனங்கள் தங்கள்…

மேலும்...

சவுதியில் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு அறிவுறுத்தல்!

ஜித்தா (24 அக் 202): சவூதியில் பேருந்து பயணிகளுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பயணிகளின் லக்கேஜ்களில் பெயர் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரை எல்லைகள் வழியாக சவுதி அரேபியாவிற்குள் நுழையும் மற்றும் திரும்பும் பேருந்து பயணிகள் தங்கள் லக்கேஜில் பயணிகளின் பெயர் உட்பட முழு தகவலையும் உள்ளிட வேண்டும். இது தொடர்பாக,…

மேலும்...

21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகெரட் விற்பனை செய்யக்கூடாது – சவூதி அரேபியாவில் புதிய சட்டம்!

ஜித்தா (06 அக் 2022): சவூதி அரேபியாவில் திருத்தப்பட்ட புகைத்தல் தடுப்புச் சட்டத்தின்படி 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது சவூதி ஷூரா கவுன்சில், புகைபிடித்தலுக்கு எதிரான சட்டத்தில் திருத்தம் செய்துள்ளது. திருத்தப்பட்ட சட்டத்தின்படி, 21 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு சிகரெட் அல்லது புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் புகையிலை பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது அது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் புதிய சட்டத்தின்படி மசூதிகள், அமைச்சகங்கள், அரசு…

மேலும்...

இந்திய அமைச்சர் பியூஷ் கோயல் சவூதி அரேபியா வருகை!

ரியாத் (18 செப் 2022): இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2 நாள் பயணமாக சவுதி அரேபியா வந்துள்ளார். அமைச்சர் பியூஷ் கோயல் ரியாத்தில் சவுதி அரேபிய வர்த்தக அமைச்சர் மஜித் அப்துல்லா அல் கசாபியை சந்தித்தார். இந்தியா-சவுதி இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் பரஸ்பர முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. பியூஷ் கோயல் ஜுபைல் யாம்பு சவுதி ராயல் கமிஷன் தலைவர் காலித் அல்-சலீமுடன் கலந்துரையாடினார். பொருளாதார வளர்ச்சியை…

மேலும்...

சவுதியில் விதிகளை மீறி சாலையின் குறுக்கே நடந்தால் அபராதம்!

ரியாத் (17 செப் 2022): சவுதி அரேபியாவின் தம்மாமில், விதிகளை மீறி சாலையை கடந்த பாதசாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சவூதி போக்குவரத்து துறையினர் சட்டவிரோதமாக சாலைகளை கடப்பவர்களுக்கு எதிராக சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். சமீப நாட்களில் தம்மாம் சீக்கோக் அருகே சாலைகளைக் கடந்ததற்காக இந்தியர்கள் உடன்பட பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் விபத்தில் சிக்குவதால் போக்குவரத்து துறையினர் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும்...

சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை!

ரியாத் (11 செப் 2022): சவூதி அரேபியாவில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்வதாக இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெயசங்கர் சவூதி அரேபியா வந்துள்ளார். சனிக்கிழமை மாலை ரியாத் இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சவூதியில் இந்திய கலாச்சார மையம் அமைப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இந்தகோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று ஜெயசங்கர் பதிலளித்தார். வெளிவிவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய…

மேலும்...

இவ்வருடம் 10 லட்சம் ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி!

ரியாத் (09 ஏப் 2022): இவ்வருடம் (2022) 10 லட்சம் ஹஜ் யாத்ரிகர்களுக்கு சவூதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று நோய் பரவியதில் இருந்து வெளிநாட்டு ஹஜ் யாத்ரிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு உள்நாடு மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து ஒரு மில்லியன் மக்களை ஹஜ் செய்ய அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளதாக சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஹஜ்ஜுக்கு குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும்…

மேலும்...

கொரோனா விதிமுறைகளை திரும்பப் பெற்றது சவூதி அரேபியா!

ரியாத் (06 மார்ச் 2022): தனிமைப்படுத்தல், பிசிஆர் சோதனை உட்பட அனைத்து கோவிட் விதிமுறைகளையும் சவூதி அரேபியா திரும்பப் பெற்றது. மக்கா, மதீனாவில் உள்ள ஹராமில் தொழுகைக்காக நுழைய அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேவேளை முகக்கவசங்கள் மற்றும் தவக்கல்னா பயன்பாடு தொடரும். இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள முக்கிய அறிவிப்புகள் ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வோம் 1. சவூதிக்கு வருபவர்களுக்கு இனி நிறுவன தனிமைப்படுத்தல், வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் PCR சான்றிதழ் தேவையில்லை….

மேலும்...

சவுதியில் நடந்த இந்திய குடியரசு தின கால்பந்தாட்டப் போட்டி!

ஜித்தா (6 பிப் 2022): இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கு மாகாணம் தமிழ்நாடு மாநில கமிட்டி சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நட்பு ரீதியான கால்பந்தாட்டப் போட்டி 28-1-2022 வெள்ளி கிழமை காலை 8:30 மணியளவில் இந்தியன் சோசியல் ஃபோரம் தமிழ் நாடு மாநில கமிட்டி தலைவர் பொறியாளர் முஹம்மது முகைதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் யுனைட்டட் ஸ்போர்ட்ஸ் கிளப் தமிழ்நாடு அணிக்கும், இந்தியன் சோசியல் ஃபோரம் கேரள அணிக்கும் இடையே ஷரஃபிய்யா ODST ஹோட்டல்…

மேலும்...