பிரதமர் மோடிக்கு உவைஸி சவால்!

ஐதராபாத் (26 நவ 2020): ஐதராபாத் தேர்தலில் உங்கள் பிரச்சாரம் எடுபடுமா? என்று பிரதமர் மோடிக்கு அஸாதுத்தின் உவைஸி சவால் விட்டுள்ளார். ஐதராபாத்தில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சாரத்திற்காக ஐதராபாத்திற்கு . பிரதமரை அழைத்து வராமல் ஏன் மற்றவர்களை அழைத்து வருகிறீர்கள்? என பாஜகவுக்கும் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை ஹைதராபாத்தில் பிரச்சாரம் செய்த பாஜக தலைவர்களில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி, பெங்களூர் தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்குவர்….

மேலும்...

நிவர் புயல் – இரு மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

சென்னை (24 நவ 2020): நிவர்’ புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில், “நிவர் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன்…

மேலும்...

ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்!

ஜெய்பூர் (14 நவ 2020): பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி கொண்டாடினார். பிரதமர் ஆனது முதல் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இருக்கும் லோங்கெவலா ராணுவ மையத்தில் தீபாவளியை கொண்டாட அங்கு சென்றுள்ளார். அவருடன் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே உள்ளிட்டோரும் தீபாவளியை கொண்டாடுகின்றனர். நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்து…

மேலும்...

ட்ரம்புக்கு ஏற்பட்ட நிலை மோடிக்கும் ஏற்படும் – மஹபூபா முஃப்தி!

புதுடெல்லி (10 நவ 2020): அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததைப் போல மோடி அரசுக்கும் விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று மஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார். பிடிபி தலைவர் மெஹபூபா முப்தி திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினார். பீகார் தேர்தல் கருத்துக் கணிப்புகள் என்.டி.ஏவின் தோல்வியை முன்னறிவிப்பதாக மெஹபூபாவின் பதில் இருந்தது. “அமெரிக்காவில் என்ன நடந்தது என்று பாருங்கள். டிரம்ப் போய்விட்டார். பாஜகவும் போகும்” என்று ஜம்முவில் பல்வேறு பிரிவுகளுடனான சந்திப்புக்குப் பிறகு மெஹபூபா முஃப்தி கூறினார்….

மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோடி அப்போது பேசும்போது, “உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாருக்கும் பலனில்லை. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியுள்ளது.. புல்வாமா தாக்குதலின்போது பாதுகாப்புப்படையினர் செய்த…

மேலும்...

பண்டிகை காலங்களில் கவனமாக இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்!

புதுடெல்லி (25 அக் 2020): பிரதமர் மோடி மண் கி பாத் உரையின்போது, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது….

மேலும்...

இந்தியா அசுத்தமான நாடு – ட்ரம்ப் கடும் விமர்சனம் : பிரதமர் மோடி அமைதி!

வாஷிங்டன் (23 அக் 2020): இந்தியா அசுத்தமான நாடு என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். நவம்பர் 3 ம் தேதி அமெரிக்கர்கள் ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய உள்ளனர். கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ள அமெரிக்கர்கள் வாக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இனவெறி மற்றும் போலீஸ் மிருகத்தனம் போன்ற முக்கிய பிரச்சினைகள் தவிர, அவ்வப்போது பல பிரச்சினைகளுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

மேலும்...

நீக்கப்பட்ட மோடியின் யூட்டூப் சேனல் டிஸ்லைக் பட்டன்!

புதுடெல்லி (21 அக் 2020): சமீபத்தில் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் யூடூப் டிஸ்லைக் பட்டன் நீக்கப்பட்டுள்ளது. நேற்று பிரதமர் ஆற்றிய உரையில் “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நெடுந்தூரம் பயணித்துள்ளனர். பொதுமுடக்கம்தான் போயிருக்கிறதே தவிர வைரஸ் இன்னும் போகவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. கடந்த 7-8 மாதங்களாக இந்தியர்களின் முயற்சியால் இந்தியா தற்போது நிலையாக இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளும் படிப்படியாக வேகமாக வளர்ந்து வருகின்றன. நமது பொறுப்புகளுக்காக இப்போது நம்மில் பலரும் வீட்டை விட்டு…

மேலும்...

முத்தலாக் குறித்து பிரதமர் மோடி பேச்சு!

புதுடெல்லி (12 அக் 2020): முத்தலாக் தடை சட்டம் இயற்றியதனால் பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற ராஜமாதா சிந்தியாவின் பார்வையை நாடு முன்னெடுத்து சென்றுள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார் ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவின் தாயார் மற்றும் மூத்த அரசியல்வாதியான ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் நூற்றாண்டு பிறந்த தின கொண்டாட்டத்தினை முன்னிட்டு அவரது நினைவாக மத்திய அரசு சார்பில் ரூ.100 நாணயம் வெளியிட முடிவானது. இதன்படி, மத்திய நிதி அமைச்சகத்தினால் இந்த சிறப்பு…

மேலும்...

விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னை (20 செப் 2020): சென்னையில் விதிமுறைகளை மீறி மோடி பிறந்தநாள் கொண்டாடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள் விவசாய அணி சார்பில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தமிழக விவசாய அணி துணை தலைவர் முத்துராமன் பங்கேற்றிருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க நூற்றுகணக்கான பாஜகவினர் அங்கு திரண்டிருந்தனர். இந்நிகழ்ச்சி நேரத்தில் வானில் பறக்கவிட கேஸ் பலூன் எனப்படும் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வைக்கப்பட்டிருந்தது….

மேலும்...