ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்!

மாஸ்கோ (06 ஜூலை 2021): : ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளது கிழக்கு ரஷ்யாவில் இருந்து 28 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம், காம்சட்கா பெனின்சுலா என்ற பகுதி அருகே சென்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது விமானத்தைத் தரையிறக்குவது தொடர்பான கட்டளைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென விமானம் மாயமாகி உள்ளது. இதனை அடுத்து விமானத்தைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும்...

இந்தோனேஷியா பயணிகள் விமானம் 62 பயணிகளுடன் திடீர் மாயம்!

ஜகார்த்தா (09 ஜன 2021): இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமனவிமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள்…

மேலும்...

பாகிஸ்தானில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகள் மிஸ்ஸிங்!

இஸ்லாமாபாத் (15 ஜூன் 2020): இஸ்லாமாபாத்தில் இரண்டு இந்திய உயர் அதிகாரிகளை காணவில்லை என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ திங்களன்று தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் விசா பிரிவில் பணிபுரிந்த இரண்டு அதிகாரிகள் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தானில் உள்ள பல உயர்மட்ட இந்திய தூதரக அதிகாரிளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தித்தும், அதிகப்படியான கண்காணிப்புக்கும் உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயம் – உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்!

புதுடெல்லி (12 பிப் 2020): அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் இணையத்திலிருந்து மாயமாகியுள்ளதாக உள்துறை அமைச்சகம அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட அசாம் இறுதி குடிமக்கள் பட்டியலின் தரவுகள் மாநில இணையதளத்தில் இருந்து மாயமாகியுள்ளன. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,சில தொழில்நுட்ப கோளாறு காரணாமக கிளவுடில் அது தென்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினை சரிசெய்யப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில்…

மேலும்...

ஷார்ஜாவில் தவற விட்ட மொபைல் போன் இந்தியாவில் கிடைத்த அதிசயம்!

ஷார்ஜா (23 ஜன 2020): ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட பெண் ஷார்ஜா விமான நிலையத்தில் அவரது மொபைல் போனை தவற விட்டுவிட்டார். இந்தியாவுக்கு சென்ற அந்த பெண் அங்கு அவரது ட்விட்டரில் அவரது போனின் புகைப்படத்தை பதிவிட்டு காணாமல் போனது பற்றி தெரிவித்திருந்தார். இந்த தகவல் ஷார்ஜா விமான நிலைய போலீசுக்கு கிடைத்தது. உடனே ஷார்ஜா போலீஸ் விமான நிலையத்தில் போனை தேடி கண்டுபிடித்து. உடனே உரியவரிடம் ஒப்படைக்கும் வகையில் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்….

மேலும்...