ஞாயிறு ஊரடங்கு ரத்தாகுமா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

சென்னை (27 ஜன 2022): தமிழகத்தில் அடுத்த கட்ட ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு முப்பதாயிரத்துக்கு மேல் பதிவாகி வந்த நிலையில் நேற்றைய தினம் சற்று குறைந்து 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவையில் 3740, செங்கல்பட்டில் 1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம்…

மேலும்...

திடீரென கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் கொரோனா – கடும் ஊரடங்கு அறிவிப்பு!

டாக்கா (26 ஜூன் 2021): இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் கொரோனா பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்தது. ஆனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்புவரை 15 சதவீதமாக இருந்த தினசரி கரோனா பாதிப்பு விகிதம், தற்போது 21.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, திங்கட்கிழமை (28ஆம் தேதி) முதல் ஏழு நாட்களுக்கு வங்கதேச அரசு, முழு ஊரடங்கை…

மேலும்...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…

மேலும்...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிப்பு!

புதுடெல்லி (30 மே 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடெங்கும் ஜூன் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு…

மேலும்...

ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி:…

மேலும்...

இந்தியாவில் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு!

புதுடெல்லி (01 மே 2020): இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்து வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்...

ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள்!

புதுடெல்லி (15 ஏப் 2020): கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏப்ரல் 20-க்கு பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் ஏப்ரல் 20க்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு…

மேலும்...

இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லை – இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்த முஸ்லிம்கள்!

ஜெய்ப்பூர் (13 ஏப் 2020): இறந்த இந்துவின் உடலை வாங்க யாருமில்லாத நிலையில் அவரது அண்டை வீட்டு முஸ்லிம்கள் இந்து முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்தனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் பஜ்ரங் நகர் பட்டா பாஸ்தி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரா. அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக ஜெய்ப்பூரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரா திங்கள்கிழமை காலமானார். ஆனால் அவரது குடும்பத்தில் ஆண்கள் யாரும் இல்லாததால் அவரது உடலை தகனம்…

மேலும்...

இந்தியாவில் திடீர் ஊரடங்கு உத்தரவால் ஐந்து குழந்தைகள் உட்பட 17 பேர் மரணம்!

புதுடெல்லி (30 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் புலம்பெயரும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் 17 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தொடங்கி உலகையே புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ். இந்தியாவில் இதுவரை 1139 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுகுறித்து எந்தவித…

மேலும்...