நிர்பயா வழக்கு – குற்றவாளிகளுக்கு மார்ச் 3 ஆம் தேதி தூக்கு!

புதுடெல்லி (17 பிப் 2020): நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தூக்கிலிடுமாறு டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது. நிர்பயா வழக்கில், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பான புதிய தேதியை அறிவிக்குமாறு நிர்பயாவின் பெற்றோர் மற்றும் தில்லி அரசு தொடர்ந்த வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி தர்மேந்தர் ரானா, முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் நால்வரையும் மார்ச் மாதம் 3ம் தேதி காலை 6 மணிக்கு…

மேலும்...

டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் சரியானதுதான் – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (17 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டம் தேவையான ஒன்றுதான் என்று உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள்….

மேலும்...

ஜாமியா வளாகத்தில் குண்டர்கள் நடத்திய தாக்குதலின் பரபரப்பு வீடியோ காட்சிகள்!

புதுடெல்லி (16 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களை குண்டர்கள் தாக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி அமைதியாக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் பயங்கரவாத குண்டர்கள் புகுந்து மாணவர்களை பயங்கரமாக தாக்கினர். மேலும் ஜாமியா மாணவர்கள் மீது…

மேலும்...

அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி – ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் முடிவு!

புதுடெல்லி (16 பிப் 2020): டெல்லி ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களை தாண்டி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 16 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை ஷஹீன் பாக் போராட்டக் காரர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டை நோக்கி…

மேலும்...

டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ ட்விட்டரில் உண்மையில் பதிந்தது என்ன?

புதுடெல்லி (15 பிப் 2020): டெல்லி முஸ்லிம் எம்.எல்.ஏ அமானதுல்லா கான் ட்விட்டரில் பதிந்ததாக ஒரு பொய் தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. டெல்லியில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி 62 இடங்களை கைப்பற்றியது. ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷஹின் பாக் பகுதி வேட்பாளர் அமானதுல்லா கான் 72 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் ட்விட்டரில், “நான் 72000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்….

மேலும்...

டெல்லி தோல்வி எதிரொலி – பதுங்கும் பாஜக -குழப்பத்தில் அமித் ஷா!

புதுடெல்லி (13 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக தலைமை குழப்பத்தில் உள்ளது. இன்று டெல்லி தேர்தல் தோல்வி குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாஜக தலைவர்களின் வெறுக்கத்தக்க பேச்சே தோல்விக்கு காரணம்” என்பதை ஒப்புக் கொண்டார். மேலும், “பாகிஸ்தான் போ, சுட்டுத் தள்ளுங்கள்” போன்ற பாஜக தலைவர்களின் வார்த்தைகளை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார். அதேவேளை குடியுரிமை சட்டம்தான் பாஜகவின் தோல்விக்கு…

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் ராஜினாமா!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று அக் கட்சியின் பொறுப்பாளர் பி.சி.சாக்கோ ராஜினாமா செய்துள்ளார். 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பாஜக எட்டு இடங்களை கைபற்றியது. ஆனால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவை…

மேலும்...

டெல்லியில் பரபரப்பு – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

புதுடெல்லி (12 பிப் 2020): டெல்லியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆம் ஆத்மி தொண்டர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கடந்த சில தினங்களாகவே துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் களத்தில் மூன்று முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் செவ்வாயன்று டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அவரது ஆதரவாளர்களுடன் வெற்றியை கொண்டாடிவிட்டு, கோவிலிலிருந்து திரும்பி வந்து…

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மியின் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி!

புதுடெல்லி (12 பிப் 2020): நடைபெற்று முடிந்துள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி சார்பில் ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களும் களத்தில் இறக்கப்பட்டனர். டெல்லியின் ஒக்லா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் அமானத்துல்லா கான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…

மேலும்...