தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் கடந்த வாரத்தில் குறைவான எண்ணிக்கையில் அதிகரித்த கொரொனா தொற்று இன்று (புதன்கிழமை மட்டும்) 105 பேருக்கு கொரோனா பாஸிட்டிவ் என தகவல் வந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நேற்று வரை 1372 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஒரேநாளில் 50…

மேலும்...

ரூ 10 கோடி நஷ்ட ஈடு – அவதூறு பரப்பிய ஊடகங்களுக்கு மவ்லானா சஜ்ஜாத் நோமானி நோட்டீஸ்!

புதுடெல்லி (19 ஏப் 2020): தன்னை குறித்து அவதூறு பரப்பியதற்காக ரூ 10 கோடி நஷ்டஈடு கேட்டு மவ்லானா சஜ்ஜாத் நோமானி ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சீனாவில் தொடங்கி உலகமெங்கும் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் ஆலோசனை கூட்டமே காரணம் என்பதாக ஊடகங்கள் மட்டுமல்லாமல் அரசும் வரிந்து கட்டிக் கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிராக…

மேலும்...

திங்கள் முதல் பணிக்கு வர அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

சென்னை (19 ஏப் 2020): தமிழகத்தில் நாளை (20 ஏப்ரல் திங்கள் கிழமை) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:- அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக்…

மேலும்...

கொரோனா: அப்படி என்ன இருக்கிறது இந்த ரேபிட் டெஸ்ட் முறையில்?

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தொற்றை கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்களை தமிழக அரசு வாங்கியுள்ளது. கொரோனா தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகமானோருக்கு அதிவிரைவாக மேற்கொள்ள வேண்டி சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட்களை வாங்க தமிழக அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்த ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்ததா? அல்லது இல்லையா? அது அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டதாகவும் பல சர்சைகள் எழுந்துள்ளன. இது இப்படியிருக்க. ரேபிட் டெஸ்ட்…

மேலும்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர் மட்டக் குழு!

புதுடெல்லி (19 ஏப் 2020): நாட்டின் முக்‍கிய பிரச்சனைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்‍கை எடுப்பதற்கு ஏதுவாக புதிய உயர்மட்ட ஆலோசனைக்‍ குழுவை காங்கிரஸ் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி நியமித்துள்ளார். முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங் தலைமையிலான குழுவில், திரு. ராகுல் காந்தி, திரு. ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, திரு. கே.சி. வேணுகோபால், திரு. ப. சிதம்பரம், திரு. மணிஷ்திவாரி, திரு. ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்‍ குழு நாள்தோறும் சந்தித்து,…

மேலும்...

முன்னுக்‍குப்பின் முரணான தகவல்கள் – குழப்பம்: டிடிவி தினகரன் சாடல்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா தடுப்புப் பணி பற்றி, முதலமைச்சர் முதல், அதிகாரிகள் வரை தொடர்ந்து முன்னுக்‍குப்பின் முரணான தகவல்களை தெரிவிப்பதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் . டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கூறியிருப்பதாவது; “தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்த்தடுப்புப்பணிகளில் தொடக்கம் முதலே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக்…

மேலும்...

கொரோனாவிலிருந்து கேரளா மீள்வதற்கு காரணம் இதுதான் – சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!

திருவனந்தபுரம் (19 ஏப் 2020):கேரளாவில் கொரோனா வைரஸிலிருந்து மாநிலம் மீள்வதற்கு ஆயுர்வேத சிகிச்சையே காரணம் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி. ஷைலஜா தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கேரளா முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இது எவ்வாறு சாத்தியமானது என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோதி அறிவுறுத்தியிருந்ததாகவும், இதனை ஏற்று கேரள அரசு நடவடிக்கை எடுத்ததாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திருமதி….

மேலும்...

ஊரடங்கில் பெண் போலீசின் தில்லாலங்கடி வேலை!

சீர்காழி (19 ஏப் 2020): ஊரடங்கிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்ட பெண் போலீஸ் ஒருவர் லஞ்சம் வாங்கியதால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா என்பவர் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஊரடங்கின் போது அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தனது கணவர் சோமசுந்தரரை அழைத்துக் கொண்டு சீர்காழி தென் பாதி பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாமூல் வசூல் செய்துள்ளார். மேலும் தனது காவல் எல்லையைத் தாண்டி…

மேலும்...

போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் தினக்கூலி காய்கறி வண்டி – ஏழைகளுக்கு மட்டும்தான் சட்டமா?

மும்பை (19 ஏப் 2020): மும்பையில் தினக்கூலி காய்கறி வண்டி ஒன்று மும்பை போலீசாரால் அடித்து நொறுக்கப்படும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதி வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 ஆம் தேதி வரை நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை கூலி தொழிலாளிகள்தான். அவர்களுக்கு தினமும் தொழில் செய்து அல்லது வேலை செய்து…

மேலும்...

ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா? – தமிழக அரசு பதில்!

சென்னை (19 ஏப் 2020): கொரோனா பராலை கட்டுப்படுத்த நாடெங்கும் மே. 3 ஆம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில துறைகளுக்கு மட்டும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு ஏப்ரல் 15 அன்று வெளியிட்ட ஆணையின்படி, ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள்‌, வணிக நிறுவனங்கள்‌ மற்றும்‌…

மேலும்...