கொரோனா அறிகுறிகளுடன் பாஜக செய்தி தொடர்பாளர் மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி (28 மே 2020): பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில்…

மேலும்...

கொரோனா வரியால் மக்கள் பெரும் அவதி!

புதுவை (28 மே 2020): கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையை சரி செய்ய கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை மேலும் அவதிக்குள்ளாக்கியுள்ளது. புதுவை மாநிலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கொரோனா வரியை விதித்துள்ளது. புதுவையில் பெட்ரோல் மீதான வரி 5.75 சதவீதமாகவும் டீசல் வரி 3.65 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கின்ற நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருப்பது மக்களுக்கு பெரும் அவதியை உருவாக்கியுள்ளது.

மேலும்...

பாரத மாதாவை எழுப்பும் பிஞ்சுக் குழந்தை! – கருத்துப்படம்

பசி பட்டினி தாங்கி பல நூறு மைல்கள் தன்னைச் சுமந்து நடந்த தாய், மரணித்ததைக் கூட அறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கும் பிஞ்சு! அலட்சிய ஆட்சியாளர்களுக்கு இக்கார்ட்டூன் சமர்ப்பணம்!   நன்றி Artoons

மேலும்...

தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர்…

மேலும்...

சென்னைக்கு காத்திருக்கும் அதிர்ச்சி – மருத்துவக் குழு பகீர் தகவல்!

சென்னை (28 மே 2020): சென்னையில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டும் என மருத்துவக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து…

மேலும்...

புலம்பெயர்ந்த இறந்த தாயை எழுப்பும் அவரது குழந்தை – மனதை பிழியும் வீடியோ!

முசாபர்பூர் (27 மே 2020): புலம் பெயர்கையில் இறந்த தாயை குழந்தை ஒன்று எழுப்பும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய அரசு…

மேலும்...

நாகை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

நாகப்பட்டினம் (27 மே 2020): நாகை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகியுள்ளது. தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா சென்னையை மிக அதிக அளவில் பாதித்துள்ளது. மேலும் பிற மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இதுவரை 51 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தனர். அவர்களில் பலர் படிப்படியாக குணமாகி வீடு திரும்பினர். அங்கு கடந்த 2 வாரங்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று பரவாத நிலையில்,…

மேலும்...

எங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

கொல்கத்தா (27 மே 2020): மேற்கு வங்க அரசிடம் தெரிவிக்காமல் 36 இரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், நான்காவது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் கையில் பணம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்லும் நிலை உண்டானது. வழியில் உணவு இன்றியும் விபத்தில் சிக்கியும் சிலர் மரணம் அடைந்தனர். இது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மத்திய…

மேலும்...

விமானங்கள் இயக்கம் – பயணிகள் தயக்கம்: விமானங்கள் ரத்து!

மதுரை (27 மே 2020): இரண்டு மாதங்களுக்கு பிறகு விமானங்கள் இயக்கப்படும் நிலையில் தமிழகத்தில் பயணிகள் விமானத்தில் பயணிக்க தயக்கம் காட்டுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி தமிழகத்தில், சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்ட விமானங்களில் பயணிக்க பயணிகள் வராததால் 1 விமானம் மட்டுமே இயக்கப்பட்டது. மற்ற விமானங்கள் ரத்துச் செய்யப்பட்டன….

மேலும்...

இயல்பு நிலைக்கு திரும்பும் துபாய்!

துபாய் (27 மே 2020): கோவிட் 19 விதிமுறைகளை தளர்த்துவதன் மூலம் துபாய் இன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ரம்ஜான் பண்டிகை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்றிலிருந்து துபாயில் பொது வாழ்க்கை மற்றும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஐம்பது சதவீத ஊழியர்கள் தொழிலாளர் அமைச்சகத்தினால் அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இது 30 சதவீதமாக இருந்தது. உணவகங்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் 30 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க…

மேலும்...