ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? -பிரதமர் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

புதுடெல்லி (27 ஏப் 2020): ஊரட‍ங்கை மீண்டும் நீட்டிப்பது குறித்து, மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், அடுத்த மாதம் 3-ம் தேதி வரை, நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டெல்லி…

மேலும்...

பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கோரிக்கை!

புதுடெல்லி (27 ஏப் 2020): நாட்டில் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்‍கப்படுவோரின் எண்ணிக்‍கை நாளுக்‍கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் தினந்தோறும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று திரு. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்‍கு 40 ஆயிரம் பரிசோதனைகளே மேற்கொள்ளப்படுவதாகவும், குறைந்தபட்சம் நாள்…

மேலும்...

பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி ஐந்து முக்கிய பரிந்துரைகள்!

புதுடெல்லி (25 ஏப் 2020): நாடெங்கும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு ஐந்து முக்கிய பரிந்துரைகளை வைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் மோடி அறிவித்தார். தொடர்ந்து, வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. ஊரடங்கு திட்டமிடப்படாத ஒன்று என காங்., விமர்சனம்…

மேலும்...

பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து!

புதுடெல்லி (24 ஏப் 2020): பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் புனித ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது. ஊரடங்கு கடைபிடிக்கப்படும் சூழலில் இந்த நோன்பு தொடங்குகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி ரம்ஜான் நோன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ரம்ஜான் முபாரக்! அனைவரின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன். இந்த புனித மாதம், ஏராளமான கருணை, நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தையும் கொண்டு வரட்டும்….

மேலும்...

ஊடகங்கள் மீது நடவடிக்கை – மோடிக்கு நெருக்கடி – முன்னாள் ராணுவ அதிகாரி கடிதம்!

புதுடெல்லி (20 ஏப் 2020): முஸ்லிம்கள் மீது குறிவைத்து திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டி, பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு முன்னாள் ராணுவ அதிகாரி கத்ரி கடிதம் எழுதியுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் சாதி மத பேதமின்றி அனைத்து சமூகத்தினரையும் ஒரு சேர பாதித்துள்ளது. ஆனால் இந்திய ஊடகங்கள் கொரோனாவை எப்படி விரட்டுவது என்பதில் கவனம் செலுத்தாமல், கொஞ்சம் கூட…

மேலும்...

கொரோனாவும், பிரதமர் நிதியும், கார்ப்பரேட் மோசடிகளும் !

கொரோனா தொற்றுக்கு நிதி சேமிப்பதற்காக ‘PM Cares’ என்ற புதிய அமைப்பை மார்ச் 28ம் தேதி தொடங்கினார் மோடி. ஏற்கனவே, பிரதமர் நிவாரண நிதி வழங்கும் திட்டம் இருக்கிறது. இது 1948ல் ஜவஹர்லால் நேருவால் கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் எந்த பேரிடர் வந்தாலும், அமைப்பாக, தனி நபராக யார் ஒருவரும் இதற்கு நிதி அளிக்கலாம். 2011 முதல் வெளிநாட்டவரும் நிதி வழங்கலாம். ஆண்டுதோறும் சில நூறுகோடிகள் இதில் பணம் சேர்கிறது. 2018-19ல் வந்த நிதி 783 கோடி….

மேலும்...

மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை…

மேலும்...

பிரதமர் மோடியின் பேச்சில் இன்றைய மாற்றம் – அதுதான் காரணமா?

புதுடெல்லி (14 ஏப் 2020): பிரதமர் மோடி ஏதாவது பேசினால் பொதுமக்களுக்கு ஏதாவது செய்யச் சொல்லி டாஸ்க் போல் கொடுப்பார். ஆனால் இன்று அப்படி எந்த அறிவிப்பும் வைக்கவில்லை. கொரோனா பரவலை தொடர்ந்து பிரதமர் மோடி இன்று நாட்டு மக்கள் முன்னிலையில் மீண்டும் உரையாற்றினார். பிரதமர் மோடி தனது பேச்சில், இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடையும் நிலையில், அது மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. என்றார்….

மேலும்...

மே.3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!

புதுடெல்லி (14 ஏப் 2020): மே 3 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை நிட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25-ந்தேதியில் இருந்து இன்று வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்று நள்ளிரவுடன் 21 நாள் கெடு முடிவடைகிறது. இதற்கிடையில் இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இச்சூழலில் தற்போது நாடு முழுவதும் மே 3 ஆம்…

மேலும்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் பல்டி!

வாஷிங்டன் (09 ஏப் 2020): இந்தியாவுக்கு மிரடல் விடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார். “மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியா கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது. இதனை அடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை அதிக அளவில் உற்பத்தி செய்து வரும் இந்தியா, அமெரிக்காவுக்கு உதவும் வகையில் அந்த மருந்தின் ஏற்றுமதிக்கு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி விதித்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது….

மேலும்...