ஓட்டு இயந்திரங்கள் – அறிவு சோம்பேறிகள்

தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசிக்கிலிருந்து வெளியாகும் கரன்சிகளுக்கு இணையானவை. நம்ம நாட்டில் கரன்சி போன இடமும் தெரியாது.. வாக்கு இயந்திரம் போகும் இடமும் தெரியாது. முதல் நிலை சோதனைகள் முடிந்த பிறகு எடுத்தேற்ற ஆய்வு (randomisation) நடத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரி வசம் தேர்தல் ஆணையத்தால் ஒப்படைக்கப்படுகிறது. அதற்குப் பின்னர் மி.வா.இபாதுகாப்புக்கு தேர்தல் அதிகாரி பொறுப்பேற்கிறார். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் பிரத்தியேக எண்ணிடப்பட்ட மி.வா.இ களை முந்தின நாள் பாதுகாப்பு அறையில்…

மேலும்...

பீகாரில்19 முஸ்லீம் வேட்பாளர்கள் வெற்றி!

பாட்னா (11 நவ 2020): பீகார் சட்டமன்றத் தேர்தலில் பத்தொன்பது முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . அவர்களில் ஐந்து பேர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) ஐச் சேர்ந்தவர்கள். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) தேர்தல்களில் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை புதன்கிழமை காலையில் அறிவித்தது, பாஜக போட்டியிட்ட 110 இடங்களில் 74 இடங்களில் வென்றது, ஜேடி (யு) தான் போட்டியிட்ட 115…

மேலும்...

மேலக்காவேரி மசூதி வக்பு நிர்வாகிகள் தேர்வு!

கும்பகோணம், மேலக்காவேரி முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் வக்ஃபு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க மேலக்காவேரி பள்ளிவாசலின் சமுதாயக்கூடத்தில் 11.10.2020 ஞாயிறன்று தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது, வாக்கு எண்ணிக்கை முடிவில் போட்டியிட்ட 10 வேட்பாளர்களில் அதிகமாக வாக்குகள் பெற்ற 5 வேட்பாளர்கள் அப்துல் ரஷீத், ஹாஜி முகமது ஜீலானி, ஜாபர் சாதிக் அலி, அபு பக்கர் மற்றும் ஜாபர் பாட்சா ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களின் பதவி காலம் 11.10.2020 முதல்…

மேலும்...

மாநிலங்களவை தேர்தல் – போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சென்னை (09 மார்ச் 2020): நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில், அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசனும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 26.3.2020 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை…

மேலும்...

குஜராத்தில் பாஜக மாணவர் அணி (ஏபிவிபி) படுதோல்வி!

அஹமதாபாத் (26 ஜன 2020) குஜராத் மத்திய பல்கலைக் கழக தேர்தலில் போட்டியில்ட்ட அனைத்து ஏபிவிபி மாணவர்களும் படுதோல்வி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கான தேர்தல் நடைபெற்று நேற்று முடிவுகள் அறிவிக்கப் பட்டன. இதில் போட்டியிட்ட பாஜகவின் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வி அடைந்துள்ளது. போட்டியிட்ட ஐந்து மாணவர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட பிஸ்ரா அம்பேத்கர் புஹ்லே மானவர்கள் அணி, மற்றும் ஃபெடரேஷன்…

மேலும்...

நிதிஷ் குமாருடன் கூட்டணி தொடருமா? – அமித் ஷா பதில்!

பாட்னா (16 ஜன 2020): பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை பாஜக சந்திக்கும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வைஷாலியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித் ஷா கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:- “குடியுரிமை திருத்தச் சட்டம் விவகாரத்தில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால்…

மேலும்...