டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் ஆம் ஆத்மி 54இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...

டெல்லியில் ஆம் ஆத்மி 50 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 51 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் ஆம் ஆத்மி 51 இடங்களிலும் பாஜக 19 இடங்களிலும் முன்னிலை…

மேலும்...

அரசை கேள்வி கேட்க யாரும் இல்லையா? டெல்லி அரச அடக்குமுறைக்கு எதிராக குமுறும் மாணவர்கள்!

புதுடெல்லி (10 பிப் 2020): “எங்கள் மீது அத்துமீறும் போலீசையும் அரசையும் கேள்வி கேட்க நாட்டில் யாரும் இல்லையா?” என்று கொந்தளிக்கின்றனர். டெல்லி மாணவர்கள். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் போராடும் மாணவர்களை போலீஸார் கொடூரமாக தாக்கும் படலம் தொடர்கிறது. டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டனர்.. ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியாக பேரணி மேற்கொண்டனர். அப்போது…

மேலும்...

டெல்லி போலீஸ் இன்றும் அட்டூழியம் – ஜாமியா மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!

புதுடெல்லி (10 பிப் 2020): டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தின்போது ஜாமியா மாணவிகள் மீது போலீசார் இன்றும் கொடூர தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிய மில்லியா மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர். அப்போது போலீசார் மேற்கொண்ட கொடூர தாக்குதலில் மாணவிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். குறிப்பாக 10 மாணவிகள் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து ஒரு மாணவி தெரிவிக்கையில், போலீசார் பெண்களின் மறைவிடங்களை குறி வைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதில் 10…

மேலும்...

சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்டவர்கள் குடிபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!

புதுடெல்லி (10 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்கள் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு, அசிங்கமாக நடந்து கொண்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கார்கி கல்லூரியில் 3 நாட்கள் கல்லூரி விழா நடைபெற்று வந்தது.  விழாவின் இறுதி நாளான சனிக்கிழமை அங்கு கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சிக்காக குழுமி இருந்தனர். இந்நிலையில் அவ்வழியே வந்த சிஏஏ ஆதரவு பேரணியில் ஈடுபட்ட கும்பல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவிகளிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து பெயர்…

மேலும்...

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி (09 பிப் 2020): தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அறிவிக்காததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இந்த தேர்தல்லின் முழு வாக்கு சதவீதத்தையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து…

மேலும்...

டெல்லி தேர்தல் கருத்துக் கணிப்புகள் உண்மையா? – அமித்ஷா வேறு வகை பதில்!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற தேர்தலில் ஆத்மி கட்சி 56 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என கூறப்பட்டது. கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்ட பிறகு பாஜக நாடாளுமன்ற., குழு உறுப்பினர்கள், மூத்த தலைவர்கள் ஆகியோருடன் அமித்ஷா, மீனாட்சி லேகி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்….

மேலும்...

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த கட்சி ஆம் ஆத்மி!

புதுடெல்லி (09 பிப் 2020): நேற்று நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கே முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53…

மேலும்...

சாமியாரான மாணவர் பாலியல் வழக்கில் கைது!

புதுடெல்லி (09 பிப் 2020): டெல்லி ஜே.என்.யூ மாணவர் ராகவேந்திர மிஸ்ரா என்ற இளம் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார். ஜே.என்.யூவில் சமஸ்கிருத பாடத்தில் பி ஹெச் டி பயிலும் ராகவேந்திர மிஸ்ரா, மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்துத்வா சிந்தனை கொண்ட ராகவேந்திர மிஸ்ரா, ஜே.என்.யூவில் முஸ்லிம் மாணவர்களுக்கு…

மேலும்...

டெல்லி பெண் போலீஸ் படுகொலையில் திடுக்கிடும் தகவல்!

புதுடெல்லி (08 பிப் 2020): டெல்லியில் பெண் போலீஸ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரை சக அதிகாரியே கொலை செய்ததோடு அவரும் தற்கொலை செய்து கொண்ட திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியின் பத்பர்கன்ஞ் தொழிற்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார் ப்ரீத்தி (28). நேற்று இரவு ரோஹினி பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்….

மேலும்...