டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை!

229

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.

இதைப் படிச்சீங்களா?:  குஜராத் மாடலை டெல்லியில் நிகழ்த்திப் பார்க்க துடிக்கும் அமித் ஷா பதவி விலக வேண்டும்: திருமாவளவன்!

இதில் ஆம் ஆத்மி 54இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட கணக்கை தொடங்கவில்லை.

முன்னதாக பாஜக 20 இடங்களை தொடட்டிருந்தது. பிறகு அக்கட்சி சரிவை தொடங்கியது.