பிரபல தமிழ் இளம் நடிகர் திடீர் மரணம்!

சென்னை (27 மார்ச் 2020): பிரபல தமிழ் இளம் நடிகர் சேதுராமன் திடீரென மரணம் அடைந்துள்ளார். கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் டாக்டர் சேதுராமன். அதன் பிறகு வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் சேதுராமன் தனது 36 வது வயதில் திடீரென மரணம் அடைந்துள்ளார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்...

பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72. விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித்…

மேலும்...

குடியுரிமை சட்டம் குறித்து முதன் முதலாக வாய் திறந்த நடிகர் விஜய்!

சென்னை (15 மார்ச் 2020): குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். இந்தநிகழ்ச்சியில் நடிகர் விஐய் பேசியதாவது: நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது. விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல; எனக்கு மனதிலும் இடம்…

மேலும்...

பிரபல தமிழ் நடிகர் இயக்குநர் ராஜ்கபூரின் மகன் மெக்காவில் மரணம்!

மெக்கா (17 பிப் 2020): பிரபல நடிகர் இயக்குநர் மகன் ஷாருக் கபூர் (23) மெக்காவில் உடல் நலக்குறைவால் மரணம். நடிகர் பிரபு கனகா நடித்த தாலாட்டு கேக்குதம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்கபூர். நடிகர் அஜித் நடித்த அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் இயக்குநர் மட்டுமின்றி நடிகராகவும் உள்ளார் ராஜ் கபூர். ஆனந்த பூங்காற்றே, தாஜ்மகால், ஏழையின் சிரிப்பில், மாயி, வாஞ்சினாதன், தென்னவன், விசில், அய்யா, ஆறு, அரண்மனை 2,…

மேலும்...

ஓ மை கடவுளே – சினிமா விமர்சனம்!

பெரிய எதிர்பார்ப்பின்றி வரும் படங்கள் சில வேளைகளில் படம் வெளியான பிறகு பெரிதும் பேசப்படும் அந்த வகையில் பெரிய எதிர் பார்ப்பின்றி வெளியாகியிருக்கும் பட ஓ மை கடவுளே. ஹீரோ அசோக் செல்வன், காமெடி நடிகர் சாரா, ஹீரோயின் ரித்திகா சிங் மூவரும் பள்ளிப்பருவம் தொடங்கி கல்லூரி பருவம் கடந்து வாழ்க்கையிலும் நண்பர்கள். ஒரு காலகட்டத்தில் ரித்திகா மீது ஹீரோவுக்கு காதல் வருகிறது. இடையில் ஒரு கனவு, எதிர்காலத்தில் நடக்கப்போவதெல்லாம் அவருக்கு தெரிகிறது. இதற்கும் ஒரு சிறு…

மேலும்...

தர்பார் தோல்வி -குடியுரிமை சட்ட ஆதரவு: ரஜினியின் அடுத்த படத்திற்கு சிக்கல்!

சென்னை (11 பிப் 2020): தர்பார் படம் படுதோல்வி அடைந்ததாலும், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாலும் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஜினி நடிப்பில் லைக்கா புரொடக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் ரஜினியின் சம்பளம் குறைக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமீபத்தில் குடியுரிமை சட்டத்திற்கு…

மேலும்...

நடிகர் விஜயின் மாஸ்டர் பிளான் – நன்றி நெய்வேலி!

சென்னை (10 பிப் 2020): நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை நடிகர் விஜய் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்துக்கே…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை எதிர்த்த திரை பிரபலம்!

சென்னை (09 பிப் 2020): நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராடுவதற்கு பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ள இயக்குநர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் நடிகர் விஜய் தேசிய அளவில் பேசுபொருளானார். ஒரு வழியாக வருமான வரித்துறை சோதனை முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய.. கடைசியில் அந்த…

மேலும்...

பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்ம மரணம்!

திருவனந்தபுரம் (07 பிப் 2020): பிரபல பாடகர் கேஜே யேசுதாஸின் சகோதர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பாடகர் கேஜே யேசுதாஸ். கேரள மாநிலம் கொச்சினை பூர்விகமாக கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். அவரது மகனாக விஜய் யேசுதாஸ் பாடகராகவும் நடிகராகவும் உள்ளார். இந்நிலையில் கே.ஜே.யேசுதாசின் இளைய சகோதரர் கே.ஜே.ஜஸ்டின். 62 வயதான இவர் கேரளா மாநிலம் காக்கநாடு பகுதியில்…

மேலும்...

மாணவர்களுக்கு இன்னொன்றை சொல்ல மறந்துவிட்டீர்களே மிஸ்டர் ரஜினி?

சென்னை (06 பிப் 2020): அரசியல்வாதிகளைப் பற்றி எச்சரிப்பது இருக்கட்டும், சினிமா ஸ்டார்கள் மாணவர்களை பயன்படுத்துவதை ஏன் எச்சரிக்கவில்லை? என்று நெட்டிசன்கள் ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். புதன் கிழமை அன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “இஸ்லாமியர்கள் சிலரின் அரசியல் லாபத்திற்காக தூண்டிவிடப்படுகிறார்கள். சிஏஏவால் அவர்களுக்கு பாதிப்பு உள்ளதாக சித்தரிக்கப்படுகிறது. என்றார். மேலும் முஸ்லிம் மதகுருமார்களையும் ரஜினி சாடியிருந்தார். மேலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடும்போது மிகவும் கவனமாக ஆலோசித்து ஈடுபட வேண்டும் என்றும்…

மேலும்...