குடியுரிமை சட்டம் குறித்து முதன் முதலாக வாய் திறந்த நடிகர் விஜய்!

Share this News:

சென்னை (15 மார்ச் 2020): குடியுரிமை சட்டம் குறித்து நடிகர் விஜய் வாய் திறந்துள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஞாயிறன்று சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார்.

இந்தநிகழ்ச்சியில் நடிகர் விஐய் பேசியதாவது:

நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது. விஜய் சேதுபதி பெயரில் மட்டுமல்ல; எனக்கு மனதிலும் இடம் கொடுத்து விட்டார்

வாழ்க்கை நதி போல, நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள் பின்னர் நம்மீது கற்களையும் எறிவார்கள். இளைய தளபதியாக இருந்த போது ரெய்டு இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. எது நடந்தாலும் நம் கடமையைச் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும்

கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் ரசிகர்கள் தவிர்க்கப்பட்டது எனக்கு வருத்தமே. அதற்கு அரைமனதோடுதான் நான் ஒப்புக் கொண்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Share this News:

Leave a Reply