பிரபல இயக்குநர், நடிகர் விசு மரணம்!

160

சென்னை (22 மார்ச் 2020): பிரபல இயக்குநரும் நடிகருமான விசு இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.

விசு, தமிழ் திரையுலகில் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். சம்சாரம் அது மின்சாரம், மணல் கயிறு உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். உழைப்பாளி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும், தயாரிப்பாளர், வசனகர்த்தா, கதாசிரியராகவும் இருந்துள்ளார். இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பரவை முனியம்மா மரணம்!

விசு இயக்கி நடித்த ‘சம்சாரம் அது மின்சாரம்’ பல மொழிகளில் எடுக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான ஃபிலிம் பேர் விருதைப் பெற்றுள்ளது. இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்தவையாக இருக்கும்.

சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகர் விசு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.