சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம்: திமுக வழங்கல்!

சென்னை (27 ஜூன் 2020):சாத்தான்குளத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ 25 லட்சம் வழங்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனாவைவிட கொடூரமான முறையில் தமிழக காவல்துறை நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய காவல்துறையினர், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்ள பழனிசாமி தலைமையிலான…

மேலும்...

நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை – ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை (16 ஜூன் 2020): கொரோனா பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாவிட்டால் திமுக நீதிமன்றத்தை நாடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் அடங்காமல் மேலும் பரவி வருகிறது. தமிழகத்தில் மே 31ம் தேதிவரை அதாவது 71 நாட்களில் 176 பேர் இறந்திருக்கிறார்கள். அடுத்த 15 நாட்களுக்குள் மட்டும் 259 பேர் இறந்திருக்கிறார்கள். இதனைப் பார்த்து மாநில அரசாங்கத்துக்கு…

மேலும்...

தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி – மேலும் ஒரு எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு – ஸ்டாலின் ட்வீட்!

சென்னை (13 ஜூன் 2020): தமிழகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., பழனி. அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது உறுதியானது. இதனையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பழனி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் முழுமையாக நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #CoronaVirus…

மேலும்...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் இருமல் – பரபரப்பில் திமுகவினர்!

சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர். திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால்…

மேலும்...

திமுக ஒப்பந்தமிட்டுள்ள பிரசாந்த் கிஷோர் நிறுவனம் திடீர் மூடல்!

சென்னை (07 ஜூன் 2020): சென்னை, அண்ணா நகரில் உள்ள பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ அலுவலகம் திடீரென மூடப்பட்டு உள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் பணிகளுக்கு திட்டமிட, பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் தி.மு.க. தலைமை ஒப்பந்தம் செய்தது. பிரசாந்த் தலைமையிலான ‘ஐபேக்’ நிறுவனத்தின் சார்பில் 234 தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு களப்பணி துவக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் ‘ஒருங்கிணைவோம் வா’ செயல் திட்டத்தால், சில மாவட்ட செயலர்கள் மற்றும் அக்கட்சியின் தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்…

மேலும்...

கொரோனாவை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (28 மே 2020): கொரோனா நோயை வைத்து நாடகம் நடத்த வேண்டாம் என்று அரசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு : “கொரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்டு வரும் நான்காம் கட்ட ஊரடங்கு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட இருக்கிறதா அல்லது முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுமா என்பதில் மத்திய – மாநில அரசுகள் தங்கள் முடிவை இன்னமும் அறிவிக்கவில்லை….

மேலும்...

ஆறுதலுக்கும் ஆபத்து – மு.க.ஸ்டாலின் அறிக்கை!

சென்னை (27 மே 2020): மீண்டும் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 14.2.2020 அன்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் அ.தி.மு.க. அரசின் சார்பில் நிதியமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த “2020-2021 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை” மற்றும் அதன் “மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள்” எல்லாம் உருவிழந்து, “கொரோனா பேரிடரால்” – அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மிகப் பெரும் பின்னடைவுகளால் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டிய…

மேலும்...

அதிமுக தலைவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி!

ஊழல் அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த அவர் திமுக ஊழல் குறித்து பேச எந்தவகையிலும் அருகதை இல்லாத கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும்...

ஒரே வார்த்தை – காத்திருந்த பாஜக – சிக்கலில் தயாநிதி மாறன்!

சென்னை (22 மே 2020): கோட்டையில் தலைமை செயலாளரிடம் நடந்த சந்திப்பு பற்றி சர்ச்சை பேட்டி கொடுத்த தயாநிதி மாறன் சொன்ன ஒரே வார்த்தை பாஜகவுக்கு அல்வா சாப்பிட்டதுபோல் காரணம் கிடைத்துள்ளது. சமூக நீதியையும், சுயமரியாதையையும் வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க.வின் தலைமை குடும்பத்து உறவினரான தயாநிதி இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளிப்பட்டது. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இது பற்றிய தன் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தார். தி.மு.க…

மேலும்...

பாஜகவுடன் கூட்டு – திமுக முக்கிய தலைவர் அதிரடி நீக்கம்!

சென்னை (21 மே 2020): திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி. துரைசாமியை நீக்கம் செய்து திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். துரைசாமி பாஜக தமிழக தலைவர் எல்.முருகனை வி.பி.துரைசாமி சந்தித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வி.பி. துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணைபொதுச்செயலாளராக மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான்; இதில் ஆச்சரியம் எதுவுமில்லை என்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும் என்று துரைசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்...