முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது. சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில்…

மேலும்...

மகாராஷ்டிராவில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு!

மும்பை (28 பிப் 2020): மகாராஷ்டிராவில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சர் நவாப் மாலிக் தெரிவிக்கையில், “தற்போதைய சட்டசபை கூட்டத்தொடர் முடிவதற்குள், மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும். பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்னர் இது தொடர்பான உரிய நடவடிக்கைகள்…

மேலும்...

டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் பாதுகாத்த இந்து கோவில்!

புதுடெல்லி (28 பிப் 2020): டெல்லி கலவர சூழலில் இந்து (சிவா) கோவிலை முஸ்லிம்கள் பாதுகாத்துள்ளனர். டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும் ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டது. இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்கள். இந்நிலையில் ஒருபுறம் அமைதி வழி போராட்டத்தை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் மத மோதலாக மாற்ற முயற்சிக்க இதுவரை 41 பேரை பலி…

மேலும்...

அதையே ஏன் திரும்ப திரும்ப கேட்கிறீங்க? – பதிலளிக்க மறுத்த ரஜினி!

சென்னை (26 பிப் 2020): முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் முன்னே நிற்பேன் என்றீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ரஜினி பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது- டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். டெல்லி வன்முறையை இரும்புக்…

மேலும்...

டெல்லி போர்க்களத்திலும் சில ரோஜாக்கள் – முஸ்லிம்களுக்கு கை கொடுக்கும் சீக்கியர்களும் தலித்துகளும்!

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி வன்முறையில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளிக்க குருத்வாராவை திறந்து வைத்துள்ளனர் சீக்கியர்கள். டெல்லியில் அமைதி வழியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை ஒடுக்க, நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க முயன்று தோற்றுப் போன பாஜக அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் அன்று டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற…

மேலும்...

முஸ்லிம்களின் போராட்டம் எதிரொலி – எடப்பாடி திடீர் அறிவிப்பு!

சென்னை (19 பிப் 2020): சென்னை மற்றும் தமிழகமெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றன. இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அடையாள அட்டை , தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷமிட்டபடி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை திடீரென அறிவித்தார். அதன்படி சென்னையில் ரூ.15…

மேலும்...

அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக உலா வரும் போலி செய்தி!

சென்னை (18 பிப் 2020): அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக ஒரு போலி செய்தி ஒன்று உலா வருகிறது. குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம் வலுபெற்றுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயா பிளஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி போல் போட்டோ ஷாப் செய்தி ஒன்று உலா வருகிறது. “அதில் குடியுரிமை சட்டம் அனைத்து மதத்தினருக்குமானது. திமுக தவறான பிரச்சாரம் செய்கிறது” என்பதாக அந்த செய்தி உள்ளது. ஆனால் ஜெயா பிளஸ் அந்த செய்தியை மறுத்துள்ளது. மேலும் இது…

மேலும்...

மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை – கவிஞர் ஜாவெத் அக்தார்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடி பாசிசவாதி என்பதில் மாற்றமில்லை. என்று பிரபல கவிஞர் ஜாவெத் அக்தார் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஜாவெத் அக்தார், இயக்குநர் மகேஷ் பட் உள்ளிட்டோர் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியில் ஜாவெத் அக்தார் மோடி பாசிஸ்டு என்பதை ஆணித்தரமாக கூறினார். மேலும் மோடியின் கூட்டத்தாரின் தலையில் கொம்பு முளைத்துவிடவில்லை. அவர்கள்தான் சிறந்தவர்கள் என்பது போலவும் மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் என்பது போலவும் நினைக்கிறார்கள். இதுவே பாஸிஸ்டு என்பதற்கு அடையாளம். மேலும் மக்கள்…

மேலும்...

டெல்லி தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்த கட்சி ஆம் ஆத்மி!

புதுடெல்லி (09 பிப் 2020): நேற்று நடைபெற்ற டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கே முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களித்துள்ளனர். டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 70 இடங்களில் அக்கட்சிக்கு 49 இடங்கள் வரை கிடைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டைம்ஸ் நவ் 44 இடங்கள் ஆம் ஆத்மிக்கும், 26 இடங்கள் பாஜகவுக்கும் கிடைக்கும் என்றும், நியூஸ் எக்ஸ் ஆம் ஆத்மிக்கு 53…

மேலும்...

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இதுவரை வாய் திறந்ததுண்டா? -ரஜினிக்கு சீமான் சரமாரி கேள்வி!

சென்னை (06 பிப் 2020): இந்திய இஸ்லாமியர்களுக்காக் இதுவரை வாய் திறந்ததுண்டா? என்று நடிகர் ரஜினிக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த், நேற்று சென்னை, போயஸ் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ- என்ஆர்சி – என்பிஆர் உள்ளிட்டவைகள் குறித்து தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். குறிப்பாக அவர், ‘முஸ்லிம்களுக்கு இந்த சிஏஏ சட்டம் மூலம் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறதா பீதி கிளப்பிட்டாங்க. அது தவறு. முஸ்லிம்களுக்குப் பிரச்னைனா முதல் ஆளா குரல் கொடுப்பேன்’ என்று பேசினார். இதைத்…

மேலும்...