மாணவி தற்கொலை வழக்கில் பாஜக தொண்டர் கைது!

பெங்களூரு (16 ஜன 2023): கர்நாடகாவில் மைனர் பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், பாஜக பிரமுகர் கைது செய்யப் பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரு மாவட்டம் குத்ரேமுக் பகுதியைச் சேர்ந்த நித்தேஷ் (25), அப்பகுதியில் பாஜக பிரமுகராவார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். பின்பு மாணவியை நித்தேஷ் திருமணம் செய்ய மறுத்ததால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கில் பாஜக பிரமுகரான…

மேலும்...

வெட்கக்கேடானது – குஷ்பு அதிரடி கருத்து!

கோவை (08ன் ஜன 2023): தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. பாஜக தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து…

மேலும்...

துபாய் ஹோட்டலில் நடந்தது என்ன? – பெண்களுக்கு எதிரான அண்ணாமலை – விளாசும் காயத்ரி ரகுராம்!

சென்னை (04 ஜன 2023): தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான பாலியல் சர்ச்சை புகார்கள் எழுந்துள்ள நிலையில், நடிகையும் பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராம், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி 6 மாதத்துக்கு சஸ்பெண்டு செய்யப்படுவதாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். அன்றுமுதல் தமிழக பாஜக பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்தார் காயத்ரி ரகுராம். பாஜக-வில் இருந்து விலகிய நிலையில் தனியார்…

மேலும்...

பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு!

சென்னை (03 ஜன 2023): அண்ணாமலை தலைமையிலான தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு சம உரிமை, மரியாதை ஆகியவற்றை வழங்காத காரணத்தினால் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: “பெண்களுக்கு மரியாதை, சம உரிமை இல்லாத தமிழ்நாடு பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவை கனத்தை இதயத்துடன் எடுக்கிறேன். அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாஜகவின் உண்மைத் தொண்டர்கள் குறித்து…

மேலும்...

4,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு – வீதிக்கு வந்த முஸ்லிம்கள்!

புதுடெல்லி (02 ஜன 2023): உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர். கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், 78 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, 4,365 கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற…

மேலும்...

திரிபுராவில் பாஜகவுக்கு பலத்த அடி!

அகர்தலா (29 டிச 2022): : திரிபுராவில் பாஜக எம்எல்ஏ திபச்சந்திரா ஹ்ரான்கவுல் கட்சியில் இருந்து விலகினார். எம்.எல்.ஏக்களின் தொடர் விலகலால் அங்கு பாஜக ஆட்டம் கண்டுள்ளது. இவர் ஓராண்டில் கட்சியிலிருந்து வெளியேறும் எட்டாவது எம்.எல்.ஏ. திபச்சந்திரா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மூன்று முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த 67 வயதான இவர், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். அவர் தலாய் மாவட்டத்தில் உள்ள கரம்சேராவில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்தார். பாஜக…

மேலும்...

முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு!

அஹமதாபாத் (17 டிச 2022): குஜராத்தில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் பாஜக பிரமுகர் சலீம் நூர் முகமது வோரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் நூர் முகமது வோரா தனது 22 வயது மனைவிக்கு உடனடி தலாக் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சலீம் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019, வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ்…

மேலும்...

காங்கிரஸுக்கு எதிராக பாஜகவுக்கு ஊடகங்கள் உதவுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர் (16 டிச 2022): பாஜகவை ஆட்சியில் இருந்து காங்கிரஸ் வீழ்த்தும் என்று ராகுல் காந்தி கூறினார். பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் சர்வாதிகாரிகளின் கட்சி அல்ல. வட மாநிலங்களில் பாரத் ஜோடோ யாத்ரா வெற்றியடையாது என்று சிலர் கூறியதாகவும் ஆனால் மக்கள் ஆதரவுடன் பாரத் ஜோடோ யாத்திரை வெற்றி பெற்றுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறினார். மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும்…

மேலும்...

பாஜக முன்னாள் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

ஹரித்வார்(14 டிச 2022): : உத்தர்காண்ட் முன்னாள் பாஜக தலைவரும், அங்கிதா கொலை வழக்கில் சந்தேக நபருமான புல்கித்தின் தந்தை வினோத் ஆர்யா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வினோத் ஆர்யாவின் கார் டிரைவர், வினோத் ஆர்யா தன்னை இரவு நேரத்தில் வீட்டிற்கு அழைத்து ஆடைகளை அவிழ்க்கச் சொன்னதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் ஆர்யா தன்னை அடித்து மிரட்டியதாக டிரைவரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் டிரைவரின்…

மேலும்...

பாஜகவுக்கு தைரியம் இல்லை; உமர் அப்துல்லா!

ஸ்ரீநகர் (14 டிச 2022): : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தேர்தலை நடத்த ஒன்றிய அரசிடம் இனி கெஞ்சப்போவதில்லை என முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா கூறியுள்ளார். பஹல்காமில் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, தேர்தலை தாமதப்படுத்துவது குறித்து தங்கள் கட்சிக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், காஷ்மீரில் தேர்தலை நடத்த பாஜக பயப்படுவதாகவும் கூறினார். மத்திய அரசு எப்போது தேர்தல் நடத்தினாலும் தேசிய மாநாடு தயாராக உள்ளது. ஆனால்…

மேலும்...