ஹிஜாப் தடை – நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரியில் போராட்டம்!

சென்னை (16 மார்ச் 2022): ஹிஜாப் தடை குறித்த கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை புதுக்கல்லூரி மாணவர்கள் நேற்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உத்தரவை எதிர்த்து கோசங்களை எழுப்பினர். இதனால் அங்கு காவல்துறை குவிக்கப்பட்டது.

மேலும்...

ஹிஜாப் மத அடிப்படையில் அவசியமில்லையா? – உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு!

புதுடெல்லி (15 மார்ச் 2022): ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, “அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறி முஸ்லிம் மாணவிகள் நிபா நாஸ் மற்றும் மணன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இருவர் சார்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்த மனுவில், மத சுதந்திரம் மற்றும் மனசாட்சி சுதந்திரம் என்ற இரு வேறுபாட்டை உருவாக்குவதில் உயர்நீதிமன்றம் தவறிழைத்துள்ளதாக மனுதாரர்கள் மிகவும் தாழ்மையுடன் சமர்ப்பிப்பதாக…

மேலும்...

ஹிஜாப் தடை தீர்ப்பு எதிரொலி – பாதியில் வகுப்பறையை விட்டு வெளியேறிய மாணவிகள்!

பெங்களூரு (15 மார்ச் 2022): ஹிஜாப் தடை செல்லும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பாதியிலேயே தேர்வை புறக்கணித்து மாணவிகள் வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளனர். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை தொடரும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஹிஜாப் என்பது அடிப்படை மத உரிமைகளில் சேராது. இது இஸ்லாமில் உள்ள அடிப்படை பழக்க வழக்கங்களில் ஒன்று கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. இந்த…

மேலும்...

ஹிஜாப் அணிவது சட்டப்படி அவசியமில்லை – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

பெங்களூரு (15 மார்ச் 2022): வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தின் ஒரு பகுதி அல்ல என்று கூறியுள்ளது. உடுப்பியில் உள்ள அரசுப் பல்கலைக்கழகப் பெண்கள் கல்லூரியைச் சேர்ந்த முஸ்லிம் மாணவிகள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி கோரி தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. பள்ளிச் சீருடையை பரிந்துரைப்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு மட்டுமே; அரசியலமைப்பு ரீதியாக…

மேலும்...

ஹிஜாப் அணிந்து கல்லூரி சென்ற மாணவி மீது ஏபிவிபி உறுப்பினர்கள் துன்புறுத்தல்!

மங்களூரு (05 மார்ச் 2022): கர்நாடகா மாநிலம் மங்களூரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கல்லூரிக்கு தேர்வு எழுதச் சென்ற மாணவி ஹிஜாப் அணிந்ததற்காக அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளார். பி. சதீஷா பாய் அரசு முதல் தர கல்லூரி மாணவி ஹிபா ஷேக், அகில் பாரதிய விஸ்வ பரிஷத் (ஏபிவிபி) உறுப்பினர்கள் தன்னை துன்புறுத்தியதாக பந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: “நான்  கல்லூரியில் தேர்வு…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – தேர்வு எழுத முடியாத நிலையில் கர்நாடக முஸ்லிம் மாணவிகள்!

பெங்களூரு (24 பிப் 2022): ஹிஜாப் தடை விவகாரத்தால் கர்நாடக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியாமல் தேர்வு எழுத தயாராக இல்லை என தெரிவித்துள்ளனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, மாணவர்கள் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக் கூடாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே எஸ்எஸ்எல்சி (10ஆம் வகுப்பு) மற்றும் (12ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சில…

மேலும்...

ஹிஜாபுக்கு ஆதரவான மனுதாரரின் தந்தையின் உணவகம் மீது தாக்குதல்!

உடுப்பி (23 பிப் 2022): பள்ளி கல்லுரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளவர்களில் ஒருவரான ஹஸ்ரா ஷிஃபாவின் தந்தைக்கு சொந்தமான உணவகத்தின் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஜாபுக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் ஹிஜாப் வழக்கின் மனுதாரர்களில் ஷிஃபாவும் ஒருவர். கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் தான் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்நிலையில் மனுதாரர் ஹஸ்ரா ஷிஃபாவின் சகோதரர் உணவகத்தை மூடும் போது அங்கு வந்த…

மேலும்...

கர்நாடகாவில் பஜ்ரங்தளை சேர்ந்தவர் கொலை – முஸ்லிம்களுக்கு எதிராக திரும்பிய வன்முறை!

ஷிமோகா (21 பிப் 2022): கர்நாடகாவில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 26 வயதான ஹர்ஷா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. கலவரத்தில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களை நோக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். கர்நாடகாவில் பஜ்ரங் தள் பிரமுகரான ஹர்ஷாவைக் கொன்றது யார் என்பதில் தெளிவு இல்லாத நிலையில், பஜ்ரங் தள் அமைப்பினரும் மாநிலத்தில் உள்ள பாஜக தலைவர்களும் இந்தக் கொலைக்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஷிமோகா பகுதியில் பல…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – மாணவிகள் கல்லூரியிலிருந்து இடை நீக்கம்?

பெங்களூரு (19 பிப் 2022): ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா கல்லூரியிலிருந்து 58 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஷிவமோகா மாவட்டத்தில் ஹிஜாப் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய கர்நாடகா கல்லூரி மாணவர்கள் 58 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட செய்தி இணையத்தில் வெளியானது. கல்லூரி விதிகளை மீறியதால் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக முதல்வர் மாணவர்களிடம் கூறிய வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்தன. “துணை எஸ்பி உள்ளிட்டோர் மாணவிகளை சமாதானப்படுத்த…

மேலும்...

ஹிஜாப் விவகாரம் – பேராசிரியர் பணியை விட்டு விலகிய கல்லூரி விரிவுரையாளர்!

பெங்களூரு (18 பிப் 2022): கர்நாடகாவில் ஹிஜாபை கைவிடச்சொன்னதால் மறுத்து பேராசிரியர் பணியை கைவிட்டுள்ளார் பெண் விரிவுரையாளர் ஒருவர். கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆசிரியர் பணியின் போது ஹிஜாபைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் பேராசிரியையாக பணிபுரியும் ஆங்கில விரிவுரையாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம். ஹிஜாப் இல்லாமல் என்னால் கற்பிக்க முடியாது, ”என்று அவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகு கூறினார். “மூன்று வருடங்களாக ஜெயின் பியு…

மேலும்...