Supreme court of India

நாட்டில் யாரும் உணவின்றி உறங்கக்கூடாது – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (07 டிச 2022): நாட்டில் யாரும் உணவின்றி வெறும் வயிற்றில் தூங்கக் கூடாது என்பதே நமது கலாச்சாரம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டின் கடைசி நபருக்கும் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலை மற்றும் நிதிப் பாதுகாப்பை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

புதுடெல்லி (06 டிஸா 2022): குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. தலைமை நீதிபதி யு.யு. லலித் மற்றும் நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை பரிசீலிக்கும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாதுதீன் ஒவைசி, ஜெய்ராம் ரமேஷ், ரமேஷ் சென்னிதலா, மஹுவா மொய்த்ரா, முஸ்லிம் லீக், சிபிஐ அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டி, திராவிட முன்னேற்றக் கழகம், அசாம் கண…

மேலும்...
Supreme court of India

எந்த மதத்தையும் யாரிடமும் திணிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (06 டிச 2022): இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தில் நம்பிக்கை கொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது சத்சங்க நிறுவனரும், இந்து ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ தாகூர் அனுகுல் சந்திராவை பரமாத்மாவாக அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஒரு தனி மனிதரின் புகழுக்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது என மதிப்பிட்ட நீதிமன்றம், மனுதாரருக்கு ஒரு லட்சம்…

மேலும்...
Supreme court of India

கட்டாய மதமாற்றம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி (05 டிச 2022): கட்டாய மத மாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் குறித்து மாநில அரசுகளின் விரிவான பிரமாணப் பத்திரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய மத மாற்றம் நாட்டில் பரவலாக நடைபெறுவதாக சுட்டிக் காட்டி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பரிசீலித்தது. இந்த மனு இம்மாதம் 12ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தனிநபர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மத மாற்றம்…

மேலும்...

நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து போராடுவேன் – பில்கீஸ் பானு திட்டவட்டம்!

ஆமதாபாத் (02 டிச 2022): எனக்கு பொதுமக்கள் தரும் ஆதரவு ஆறுதல் அளிக்கிறது. நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று பில்கீஸ் பானு தெரிவித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு தனது கூட்டுப் பலாத்காரம் மற்றும் 7 பேரைக் கொன்றது தொடர்பான வழக்கில் 11 குற்றவாளிகளை விடுவித்து விடுவித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த பில்கிஸ் பானோ, எது தவறு, எது சரியானது என்பதற்காக மீண்டும் நின்று போராடுவேன். அவள் குடும்பம். கோத்ரா ரயில் எரிப்பு…

மேலும்...

பில்கிஸ் பானு பாலியல் வழக்கு குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்யும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்!

புதுடெல்லி (22 அக் 2022): 2002 கோத்ரா கலவரத்தின் போது பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த 11 குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய பெண்கள் அமைப்பின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள முக்கிய மனுவுடன் இந்த மனுவையும் விசாரிக்க ஒப்புக்கொண்டுள்ளது. முன்னதாக, 11 குற்றவாளிகளுக்கு விடுதலை…

மேலும்...

மதவெறுப்பூட்டும் பேச்சு – உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

புதுடெல்லி (21 அக் 2022): மத ரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாக நேரிடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் நடத்தும் வணிகங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற பாஜக எம்பி பர்வேஷ் வர்மாவின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது இந்த மனுவை நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ஹிருத்திகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு…

மேலும்...

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் நன்னடத்தை என்ன? – உச்சநீதிமன்றம் கேள்வி!

புதுடெல்லி (18 அக் 2022): பிகிஸ் பானு வழக்கில் எந்த நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தின்போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவரது 3 வயது குழந்தை உட்பட 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கைதான 11 பேருக்கு, 2008ல் ஆயுள் தண்டனை விதித்து சி.பி.ஐ.,…

மேலும்...

ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு!

புதுடெல்லி (13 அக் 2022): கர்நாடக அரசின் ஹிஜாப் தடை குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கியுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் வகுப்பறைகளில் ஹிஜாப் அணிய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் வெடித்தது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அனால் கர்நாடக நீதிமன்றம் ஹிஜாப் தடை செல்லும் என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இந்த உத்தரவை…

மேலும்...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரிய மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

புதுடெல்லி (11 அக் 2022): பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரிய மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என மனுதாரர்களை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த மனு 32வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்தால் அபராதம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று மனுதாரரை எச்சரித்தார்.

மேலும்...