சவுதி தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு 93 சதவீதம் அதிகரிப்பு!

Share this News:

ரியாத் (10 மார்ச் 2023): சவூதி அரேபியாவில் தொழில் துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தத் துறையில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 93% அதிகரித்துள்ளது என்று தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் 33,000 பேர் பணிபுரிந்தனர். 2022ஆம் ஆண்டின் இறுதியில் ஊழியர்களின் எண்ணிக்கை 63,800ஐத் தாண்டியுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான மக்கள் ரியாத் மாகாணத்தில் வேலை செய்கிறார்கள்.


Share this News:

Leave a Reply