இஸ்ரேல் கோரிக்கையை நிராகரித்தது கத்தார்!

Share this News:

தோஹா (15 செப் 2022): உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி கத்தாரில் தற்காலிக தூதரகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது.

உலகக் கோப்பையை காண வரும் இஸ்ரேல் மக்களுக்கு உதவி புரியும் விதமாக கத்தாரில் தற்காலிக தூதரகம் அமைக்க இஸ்ரேல் கோரிக்கை வைத்ததாகவும் அந்த கோரிக்கையை கத்தார் நிராகரித்ததாக உள்ளூர் அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2008 காசா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை கத்தார் துண்டித்தது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை கத்தார் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் கோரிக்கையை கத்தார் நிராகரித்துள்ளது.

அதேவேளை இஸ்ரேலிய குடிமக்கள் கத்தாரின் நியமிக்கப்பட்ட பாதைகள் வழியாக உலகக் கோப்பையைக் காண கத்தாருக்குச் வரலாம் அனைத்து போட்டி டிக்கெட் வைத்திருப்பவர்களும் ஹயா கார்டு மூலம் கத்தாருக்கு வரலாம். இஸ்ரேல் உலகக் கோப்பைக்கு தகுதி பெறவில்லை என்றாலும், பல கால்பந்து ரசிகர்கள் இந்த ஆட்டத்தைப் பார்க்க வரக்கூடும். என்பதால் இதற்கு கத்தார் அனுமதி வழங்கியுள்ளது.


Share this News:

Leave a Reply