ஐக்கிய அரபு அமீரகம் அஜ்மானில் இந்த மாதம் முதல் புதிய பேருந்து கட்டணம்!

Share this News:

துபாய் (04 ஜன 2023): அஜ்மான் போக்குவரத்து ஆணையம் புதிய பேருந்து கட்டணத்தை அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த பேருந்து கட்டணம் இம்மாதம் 23ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பஸ் டிக்கெட்டுகளை மஸார் அட்டை அல்லது நேரடி கட்டணம் மூலம் வாங்கலாம்.

துபாய் செல்லும் பேருந்துகள் தவிர மற்ற அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த விகிதம் ஜனவரி 23 முதல் அமலுக்கு வருகிறது.

தற்போது பஸ் கட்டணம் மஸார் அட்டை மூலம் செலுத்தினால் 3 திர்ஹமும், பணமாக செலுத்தினால் 5 திர்ஹமும் ஆகும்.

மஸார் அட்டை (Massar Card) என்பது பொதுப் பேருந்துகளில் கட்டணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் அட்டை. மஸார் கார்டுகளை ஆன்லைனிலும் பேருந்து நிலையங்களிலும் ரீசார்ஜ் செய்யலாம்.

நேற்று, மஜார் அட்டை பயன்படுத்தும் மாணவர்களுக்கு, 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply