சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேர் கைது!

Share this News:

ரியாத் (09 டிச 2020): சவூதியில் மரம் கடத்தல் தொடர்பாக இந்தியர்கள் உட்பட 69 பேரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர்.

சவூதியின் புதிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி விறகு உள்ளிட்டவை விற்பனை செய்வது குற்றமாகும். இந்நிலையில் குளிர்காலம் தொடங்கியதிலிருந்து விறகுகளுக்கான விற்பனை தீவிரமாக உள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதில் சட்டவிரோதமாக விறகு விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்ற 188 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரியாத், மக்கா, மதீனா, அல்-காசிம், கிழக்கு மாகாணம், அல்-ஜாவ்ஃப், வடக்கு மண்டலம் மற்றும் தபுக் ஆகிய இடங்களில் பலர் மரக்கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். புதிய சட்டத்தின் கீழ், மரக் கடத்தலுக்கான குறைந்தபட்ச அபராதம் 10,000 ரியால் ஆகும். மரம் வெட்டப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், ரூ .50,000 வரை அபராதம் விதிக்கப்படும். பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளில் மரம் அழிக்கப்பட்டாலும் தண்டனை ஒன்றுதான். தரையில் தீ வைத்து குளிர் காயவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply