இந்திய செவிலியர் சவூதி ஜித்தாவில் திடீர் மரணம்!

Share this News:

ஜித்தா (13 டிச 2020): சவூதி ஜித்தாவில் பணிபுரிந்து வந்த இந்திய செவிலியர் மஞ்சு மாரடைப்பால் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கண்ணுரை சேர்ந்த மஞ்சு வர்கீஸ் (37) ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார். மஞ்சவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. அனைவரும் இந்தியாவில் உள்ளனர்.

மஞ்சு 10 வருடங்களாக சவுதியில் பணிபுரிந்து வந்தார் என்பதும், கடந்த 4 வருடங்களாக ஜித்தா நேஷனல் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply