மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இவ்வருடம் முதல் தமிழிலிலும் கேட்கலாம்!

Share this News:

மக்கா (01 ஜூலை 2022): புனித மக்காவில் ஹஜ் அரஃபா பேருரை இனி தமிழிலும் கேட்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது பிறை 9 அன்று அரஃபா பெருவெளியில் உலக மக்களுக்காக உரை நிகழ்த்தப்படுவது முக்கிய நிகழ்வாகும்.

அரபியில் ஆற்றப்படும் அந்த உரை, பத்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் முதல் புதிதாக தமிழ் உட்பட நான்கு மொழிகள் இணைக்கப்பட்டு மொத்தம் 14 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது.

இந்த வருட அரஃபா பேருரை வரும் 8/7/2022 வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்த்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply