துபாயிலிருந்து இந்தியா செல்பவர்களுக்கு அறிய வாய்ப்பு!

Share this News:

துபாய் (14 செப் 2022): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குச் செல்லத் திட்டமிடுபவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு .

விமான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இந்தியாவுக்கான விமானக் கட்டணம் 300 திர்ஹம்களுக்குக் கீழே விமான நிறுவனங்கள் வசூலிக்கின்றன.

கோடை விடுமுறை முடிந்து டிக்கெட் விலை கணிசமாக குறைந்துள்ளதாக டிராவல் ஏஜென்ட்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தீபாவளியையொட்டி இந்த மாத இறுதிக்குள் கட்டணம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு திரும்புவதற்கான டிக்கெட்டின் விலை இன்னும் 1000 திர்ஹத்திற்கு குறைவாக கிடைப்பதில்லை.


Share this News:

Leave a Reply