ஜித்தாவில் வாகனம் மோதியதில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழப்பு!

ஜித்தா (15 செப் 2022): சவுதி அரேபியா ஜித்தாவில் வாகனம் மோதிய விபத்தில் 4 வயது இந்திய சிறுமி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு தெக்குமுறியைச் சேர்ந்த புலிகள் முஹம்மது அனஸின் மகள் ஈஸா மர்யம். இவர் தாயுடன் சாலையை கடக்கும்போது வாகனம் மோதியதில் ஈஸா மர்யம் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்க்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.

சிறுமியின் நல்லடக்கம் நேற்று மாலை ருவைஸ் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஈஸா மர்யமும், அவரது தாயும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விசிட் விசாவில் ஜித்தா வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply