ஜித்தா சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் பூங்காவில் தீ விபத்து!

Share this News:

ஜித்தா (30 டிச 2022): ஜித்தா பாலஸ்தீன சாலையில் உள்ள சிட்டி பார்க் ஃபெஸ்டிவல் சிட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த பூங்காவில் வெள்ளிக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. மின்சார பொம்மைகள், ஆயத்த ஆடைகள் மற்றும் பிற பொருட்களை விற்கும் ஸ்டால்கள் தீயில் கருகின.

இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மேலும் பூங்கா மற்றும் அருகில் உள்ள கிடங்குகளுக்கு தீ பரவும் முன் குடிமைத் தற்காப்பு படையினர் தீயை அணைத்தனர்.


Share this News:

Leave a Reply