வீட்டில் ஒரே அறையில் தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை!

துபாய்(13 மார்ச் 2022): துபாயில் அறையில் ஒன்றாக தங்கியிருத்தவரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது.

துபாய் அல்ஐனில் வீட்டில் ஒரே அறையில் தங்கியிருந்த சக நண்பரை கொலை செய்த வழக்கில் 35 வயது ஆப்ரிக்கன் பிரஜைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உம்முல் குவைனில் மிஸ்டிமெய்னர் நீதிமன்றம் கொலையாளிக்கு மரண தண்டனை விதித்தது.

இருவரும் உமுல் குவைனில் அல் ஹம்ரா மாவட்டத்தில் வாடகை வீடு எடுத்து ஒரே அறையில் தங்கி வந்தனர். சொந்த நாட்டை சேர்ந்த மற்ற சிலரும் இவருடன் அறை பகிர்ந்து கொண்டனர்.

கொல்லப்பட்ட 45 வயதுடையவர் மார்பில் கடுமையாக தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் தொலைபேசியில் பேசும் போது இருவருக்கும் தர்க்கம் ஏற்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. இது கொலையில் முடிந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயற்சித்தவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply