சவுதியில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு!

Share this News:

ஜித்தா (03 ஏப் 2021): சவுதி அரேபியா அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ் டி பி ஜ மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக சவுதி அரேபியா ஒருங்கினைப்பாளர் பொறியியாளர் VKMM காஜா மைதீன் தலைமையில் நடைபெற்றது. இந்தியன் சோசியல் ஃபோரம் ஜெத்தா மாகான தலைவர் பொறியியாளர் அல் அமான் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்.

இந்தியன் சோசியல் ஃபோரம் சவூதி அரேபியா ஒருங்கினைப்பாளர் அஷ்ரப் முறையூர், இக்கூட்டணியின் வலிமை, நம் ஜனநாயகத்தை பாதுகாக்க முக்கய தேவை என்பதை வலியுறித்தினார்.

கூட்டத்தின் முக்கிய அம்சமாக தமிழகத்தில் உள்ள சவுதி அரேபியா வாழ் தமிழர்களின் குடும்பத்தினர் உறவினர்கள் நன்பர்களின் வாக்குகளை பெறுவது என வியூகம் வகுத்து தமிழகம் முழுவதும் சவுதி அரேபியா சார்பாக இரண்டு லட்சம் வாக்குகளை பெற்று தருவது,
மக்கள் செல்வர் TTV தினகரன் அவர்களை தமிழக முதல்வராக அறியனையில் அமர்த்த அயராது பாடுபடுவோம் என்கிற தீர்மானத்தோடு வெற்றி சின்னமாம் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

இக்கூட்டத்தில் அமமுக நிர்வாகிகள் ரிஷ்கெல்லா, பாஸ்ட் இப்ராகிம், பாசறை விக்னேஷ், தமிழன் சுகைல், சார்பாக அலி கோயா, முகமது ரபீக் உள்ளிட்ட கூட்டனி கட்சிகளின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொன்டர்கள் என பெரும் திரளாக கலந்து கொன்டனர்.

இறுதியில் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது


Share this News:

Leave a Reply