எர்துருல் வரலாற்றுத் தொடர் சீசன் 1: பகுதி 04 – வீடியோ!

Share this News:240p Mobile Version For Download Click Here

முன்கதை..

எர்துருலால் சிலுவைப்படையினரிடமிருந்து காப்பாற்றி கொண்டு வரப்பட்டவர்கள் யாரென்ற சந்தேகம் எழுகிறது. அவர்களால் காயி கோத்திரத்தினருக்குப் பிரச்சனையும் வருகிறது. காயி கோத்திரத்தினுள்ளேயே எர்துருலின் சகோதரர் குண்டோக்டுவும் சுலைமான் ஷாவின் சகோதரர் குர்தோக்லுவும் பதவி குறித்து யோசிக்கின்றனர்.

தம் தங்கை கோக்சேவுக்கு எர்துருலைத் திருமணம் செய்து வைக்கவும் தம் கணவனை அடுத்தத் தலைவராக்கவும் நினைக்கிறார்و குண்டோக்டுவின் மனைவி செல்சன் ! எர்துருல் தாம் காப்பாற்றி கொண்டு வந்த பெண் ஹலீமா-வை விரும்புகிறார். காயி கோத்திரத்துக்கு வளமான ஒரு நிலம் கேட்டு அலெப்போவுக்கு எர்துருல் தம் நண்பர்களுடன் செல்கிறார். எர்துருலால் கொல்லப்பட்ட பிசோலின் சகோதரன் டைட்டஸ் உதவி கேட்டு செல்ஜுக் அரசின் கமான்டர் கரடோய்கரிடம் செல்கிறார்.

தம்மால் மேலும் காயி கோத்திரத்தினருக்குப் பிரச்சனை வராமல் இருப்பதற்காக அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் கிளம்பிவிட, எர்துருல் காப்பாற்றி கொண்டு வந்த தந்தையும் மகளும் திட்டமிடுகின்றனர். இரவு புறப்படுவதற்கு ஆயத்தமாகின்றனர். அதே நேரம், எர்துருல் இல்லாத காயி கோத்திரத்தில் இரவில் நுழைந்து அவர்களைக் கடத்திச் செல்லவும் பயணத்திலிருக்கும் எர்துருல் மீது திடீர் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்து டைட்டஸிடம் கொடுக்கவும் திட்டமிடுகிறார்ز கரடோய்கர்!

திட்டமிட்டப்படி கிளம்புவதற்காக இருந்த நிலையில், கரடோய்கரின் ஆட்கள் குர்தோக்லுவின் உதவியுடன் ஹலீமா மற்றும் அவர் தந்தையைப் பிடிக்கின்றனர். அவர்களைக் கடத்திச் செல்ல முற்படும்போது, திடீரென ஒரு நபர் இடையில் வந்து அவர்களைக் காப்பாற்றுகிறார். பின்னர் அவர் தாம் யார் என்ற விவரத்தை அவர்களிடம் விவரிக்கிறார்.

தம் கோத்திரத்தின் பாதுகாப்பை மீறி கரடோய்கரின் நபர்கள் தம் விருந்தினர் மீது தாக்குதல் நடத்தியது தமக்கு நேர்ந்த அவமானமாக கோபப்படுகிறார், சுலைமான் ஷா! அதற்காக, காயி கோத்திர வீரர்களுக்குத் தண்டனை கிடைக்கிறது. அதே சமயம், அவ்வாறான தாக்குதல் நடக்க கோத்திரத்தினுள்ளிலிருந்தே யாரோ உதவியுள்ளார்கள் எனும் சந்தேகம் எழுகிறது. குர்தோக்லு-தான் அந்த நபர் என நினைக்கிறார், குண்டோக்டு!

பயணத்திலிருக்கும் எர்துருலின் மீதும் உறங்கிக் கொண்டிருக்கும்போது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில் மயிரிழையில் தப்பிக்கிறார், எர்துருல்! ஆனால், அவர் நண்பர் துர்குட்டிற்குக் காயம் ஏற்படுகிறது.

டெம்ப்ளர்களின் கோட்டையில் உஸ்தாத் ஆஸம், சிலரைத் தேர்வு செய்து காயி கோத்திரத்தினை அழிப்பதற்காக அனுப்பி வைக்கிறார்.

கரடோய்கர் போட்ட இரு திட்டமும் தோல்வியில் முடிந்ததால், அவருக்கும் டைட்டஸுக்கும் இடையில் மோதல் எழுகிறது. ஒருவரையொருவர் கொன்றுவிடுவதாக கூப்பாடு இடுகின்றனர். இனி தம் வழியில் எர்துருலைத் தாமே
கொல்வதாகக் கூறி, அலெப்போவுக்குக் கிளம்புகிறார்,டைட்டஸ்!

துர்குட்டிற்கு ஏற்பட்ட காயம் பயணத்துக்கு இடையூறை விளைவிக்கிறது. ஆபத்தான நிலையிலிருக்கும் துர்குட்டைக் காப்பாற்ற என்ன செய்வது எனத் தவிக்கும் வேளை, இப்னுல் அரபி வந்து சேருகிறார். அவரின் உதவியால் துர்குட்டின் காயம் சரி செய்யப்படுகிறது. அவர்கள் இரவு உணவு உண்ணும் வேளையில் டைட்டஸ் அங்கு வந்து சேருகிறார். அவர்களுடன் இரவு உணவில் கலந்து கொள்கின்றார், தாம் தேடிப் போகும் எர்துருலும் உஸ்தாத் ஆஸம் தேடும் இப்னுல் அரபியும்தான் தம் முன்னால் இருக்கின்றனர் என்று தெரியாமலேயே!

இத்துடன் இப்பகுதி முடிவடைகிறது.

எர்துருல் சீசன் 1 தொடர் 3 | எர்துருல் சீசன் 1 தொடர் 5


Share this News:

Leave a Reply