விருதுகளை குவிக்கும் ஜெய் பீம் திரைப்படம்!

Share this News:

சென்னை (24 ஜன 2022): ஞானவேல் எழுதி இயக்கி வெளியான திரைப்படம் ஜெய்பீம். இப்படத்தை சூர்யா நடித்ததோடு தனது 2டி எண்டெர்டெயிண்ட் நிறுவனம் மூலம் அவரே தயாரித்திருந்தார்.

இருளர் சமூகத்தினர் சந்தித்த ஒரு பிரச்சனையை மையமாகக் கொண்டு, அவர்களுக்காக வழக்கறிஞர் சந்துரு என்பவர் எப்படி போராடி நியாயம் பெற்று தந்தார் என்கிற உண்மை சம்பவத்தை திரைக்கதை ஆக்கியிருந்தனர்.

இப்படம் பலவேறு தரப்பிலும் பாராட்டைப் பெற்றது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பலரும் இப்படத்தை பாராட்டினர்.

மறுபக்கம் ஜெய்பீம் திரைப்படம் பல விருதுகளையும் குவித்து வருகிறது. முதன் முதலாக ஆஸ்கர் யுடியூப் தளத்தில் ஜெய்பீம் பற்றிய பதிவு இடம் பெற்றிருந்தது. தற்போது நொய்டா திரைப்பட விழாவில் ஜெய்பீம் படம் விருதுகளை குவித்துள்ளது. சமீபத்தில் நொய்டா சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்பட்டது.

இவ்விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை இப்படம் பெற்றுள்ளது. மேலும், சிறந்த நடிகர் விருது சூர்யாவுக்கும், சிறந்த நடிகை விருது நடிகை லிஜோமோல் ஜோஸுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply