அமலாபால் விவாகரத்துக்கு தனுஷ்தான் காரணம் – விஜய் அப்பா பகீர் தகவல்!

Share this News:

சென்னை (02 பிப் 2020): இயக்குநர் விஜய் நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம் என்று விஜயின் அப்பாவும் தயாரிப்பாளருமான ஏ.எல்.அழகப்பன் தெரிவித்துள்ளார்.

மதராஸ பட்டினம் போன்ற நல்ல படங்களை இயக்கியவர் விஜய், இவர் இயக்கிய தெய்வ திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில் விஜய், அமலா பால் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

இதுகுறித்து ஏ.எல்.அழகப்பன் தெரிவிக்கையில், திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்று தான் அமலா பால் முடிவு செய்திருந்தார். ஆனால் தனுஷ் தான் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகே அமலா மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இது தான் விஜய், அமலா பால் பிரிய முக்கிய காரணம் என்று அழகப்பன் தெரிவித்துள்ளார்.

விஜய், அமலா பால் பிரிய தனுஷ் காரணம் என்று முன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் அழகப்பன் இப்படி பேட்டி கொடுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Share this News:

Leave a Reply