புறக்கணியுங்கள் – கரீனா கபூருக்கு எதிராக இந்துத்வாவினர் கொந்தளிப்பு!

Share this News:

மும்பை (13 ஜூன் 2021): சீதாவாக நடிக்க எந்தவிதத்திலும் கரீனா கபூர் கான் ஒப்பானவர் அல்ல என்று இந்துத்வாவினர் கரீனா கபூருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர்.

‘சீதா-தி அவதாரம்’ என்கிற பெயரில் உருவாகும் பாலிவுட் திரைப்படத்தில் சைப் அலிகான் மனைவியும் நடிகையுமான கரீனா கபூர் சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் கரீனாவை சீதாவாக நடிக்க வைக்க வேண்டாம் என்று ட்விட்டரில் இந்துத்வாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘Boycott Kareena Kapoor Khan’ என்ற ஹேஷ் டேக்கும் சங்பரிவார்களால் பிரபலமாக்கப்பட்டு வருகிறது.

கரீனா எந்த விதத்திலும் சீதாவின் பாத்திரத்திற்கு தகுதியற்றவர், ‘இந்து கடவுள்களை மதிக்காத ஒரு நடிகை இந்த பாத்திரத்தை செய்யக்கூடாது’, ‘திமூர் கானின் தாயார் கரீனா எப்படி இந்த பாத்திரத்தை செய்ய முடியும்’, ‘ இந்து உணர்வை புண்படுத்தியாவரை , இந்து கதாபாத்திரத்தில் நடிக்க செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. என்று டிவிட்டரில் கருத்துக்கள் பரவி வருகின்றன.

3 டி படமாக வரும் இந்த படத்தில் ராமராக மகேஷ் பாபு, ராவணனாக ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. . கே.வி. விஜயேந்திர பிரசாத் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிடப்படும் என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply