சமையல் கியாஸ் விலையும் உயர்வு – வேறு என்ன விலையெல்லாம் அதிகரிக்குமோ ?

புதுடெல்லி (15 பிப் 2021): இன்று சமையல் கியாஸ் விலையை மாற்றி அமைத்து மத்திய பெட்ரோலிய துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் மானியம் கொண்ட சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. அதன் பிறகு டிசம்பர் 16-ந் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்து வந்தது. இந்தநிலையில் இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.735 ஆக…

மேலும்...

ஆறடி இடைவெளி அவசியம் – காதலர் தினத்தில் போலீஸ் அதிரடி!

மும்பை (14 பிப் 2021): கோவிட் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறடி இடைவெளியுடன் காதலர் தினம் கொண்டாட மும்பை போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து மும்பை போலீசார் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், “தூரம் அன்பை வலிமையாக்குகிறது, உங்கள் காதல் முகமூடி மற்றும் ஆறு அடி தூரம் இதுவே எங்களுக்கு தேவை ” என்று மும்பை காவல்துறை ட்விட்டரில் தெரிவிக்கபப்ட்டுள்ளது. .

மேலும்...

31 முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் இறக்கும் பாஜக!

பருச் (12 பிப் 2021): குஜராத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் பாஜக முஸ்லிம்களுக்கு அதிக இடங்களை வழங்கியுள்ளது. பருச் மாவட்டத்தில், பாஜக 31 வேட்பாளர்களுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. இவர்களில் 17 பெண்கள் அடங்குவர். இந்த மாவட்டத்தில் முதல் தடவையாக பாஜக பல முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த தகவலை பருச் மாவட்ட பாஜக தலைவர் மாருதி சிங் அடோதரியா தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தற்போது காங்கிரஸ் கையில் உள்ளது இது இப்படியிருக்க ஆசாதுதீன் ஒவைசியின் AIMIM…

மேலும்...

இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் மாற்றத்தை உருவாக்குவோம் – ஒவைசியின் மாணவர் பிரிவு உறுதி!

புதுடெல்லி (12 பிப் 2021): ஒவைசியின் AIMIM கட்சி ஒரு மாணவர் பிரிவை உருவாக்கி, பல்கலைக்கழக அரசியல் மற்றும் நாட்டில் தேர்தல்களில் தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது. உத்தரப்பிரதேசம் அலகாபாத் பல்கலைக்கழக யூனியன் தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமின் மாணவர் பிரிவு போட்டியிடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நேற்று ஒரு மாணவர் பிரிவு உருவாக்கப்பட்டது. உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்களை அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தி…

மேலும்...

கையில் பணமில்லை – பகீர் கிளப்பும் முன்னாள் பிரதமர்!

பெங்களூர் (11 பிப் 2021): : தேர்தல் செலவினங்களுக்கு பணம் இல்லாததால் வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் ஜே.டி (எஸ்) போட்டியிடாது என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்காம் மக்களவைத் தொகுதி மற்றும் பசவகல்யன், சிண்ட்கி மற்றும் மஸ்கி சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும். இடை தேர்தல் குறித்து அவர் தெரிவிக்கையில், “இப்போதைக்கு இடைதேர்தல் குறித்து சிந்திக்கப்போவதில்லை. அதற்கு செலவு செய்ய பணமும் இல்லை. 2023 தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்….

மேலும்...
Mamta-Banerjee

நீங்கள் செய்துதான் பாருங்களேன் – பாஜகவுக்கு மம்தா சவால்!

கொல்கத்தா (11 பிப் 2021): மேற்கு வங்கத்தில் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கும் மாதாவுக்கு இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வாங்க சட்டமன்றத் தேர்தல் முடிவடைவதற்கு முன்னர் பானர்ஜி ஜெய் ஸ்ரீராம் என்று கூறுவார் என்று தெரிவித்திருந்த. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் பாஜகவால்…

மேலும்...

உண்மையை பேசியதற்காக என் மீது நடவடிக்கை என்றால் எனக்கு கவுரவமே – மஹுவா மொய்த்ரா!

புதுடெல்லி (10 பிப் 2021): இந்தியாவின் இருண்ட காலத்தில் உண்மையைப் பேசியதற்காக நடவடிக்கை என்றால் அது எனக்கு அளிக்கப்பட்ட கவுரவமே என்று கூறியுள்ளார். நேற்று நாடாளுமன்ற உரையில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மஹுவா மொய்த்ரா விளாசித்தள்ளினார். இதனால் இவர் மீது உரிமை மீறல் பிரச்சனையைக் கொண்டு வந்து அவை நடவடிக்கைகளிலிருந்து இவரை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால் சட்டப்படி மஹுவா மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால்…

மேலும்...

பாஜகவுக்கு அடிமேல் அடி – முக்கிய தலைவர்கள் ராஜினாமா!

மும்பை (10 பிப் 2021): மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பக்கபலமாக இருந்த ஏழு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சிவசேனாவின் இணைந்துள்ளனர். மகாராஷ்டிரா பாஜகவுக்கு சிவசேனா சிம்ம சொப்பனமாக அமைந்துள்ளது. கொங்கன் பிராந்தியத்தில் உள்ள வைபவ் வாடி மாநகராட்சியின் ஏழு கவுன்சிலர்கள் பாஜகவை விட்டு வெளியேறி சிவசேனாவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீட்டில் அவரது முன்னிலையில் கட்சியில் சேர்ந்தனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா மகாராஷ்டிராவிற்கு வந்து சென்ற சில மணி நேரங்களிலேயே அவர்கள் பாஜகவை…

மேலும்...

இந்திய முஸ்லீம் என்பதில் பெருமையடைகிறேன் – குலாம்நபி ஆசாத் உருக்கம்!

புதுடெல்லி (09 பிப் 2021): நான் இந்திய முஸ்லிம் என்பதை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்று மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம்நபி ஆசாத் உருக்கமாக பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக குலாம்நபி ஆசாத், தற்போது மாநிலங்களவையில் எதிர்கட்சி தலைவராக உள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக இந்த பதவியில் இருந்து வருகிறார். குலாம்நபி ஆசாத்தின் பதவிக்காலம் வரும் 15ம் தேதி வாக்கில் முடியவுள்ளது. இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஓய்வு பெறுவதால் அவருக்கு…

மேலும்...