ராஜீவ் காந்தி பெயரில் விருது அறிவித்து ஒன்றிய பாஜக அரசுக்கு சிவசேனா அரசு பதிலடி!

மும்பை (11 ஆக 2021): ஐடி துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரில் மகாராஷ்டிரா அரசு விருது அறிவித்துள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் விருது, ஜர் தியானசந்த் கேல் ரத்னா என்று மாற்ற மோடி அரசு எடுத்துள்ள நிலையில் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஒன்றிய பாஜக அரசுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தவ் தாக்கரே அரசு எதிராக அதிரடி காட்டியுள்ளது. இதுகுறித்து அவர்…

மேலும்...

பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்!

புதுடெல்லி (09 ஆக 2021): ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக ஐக்கிய நாடுகள் சபை கவுன்சில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி பேசிய மோடி, “கடல்சார் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராட, கூட்டு ஒத்துழைப்பு தேவை!” என்று கருத்து தெரிவித்தார். மேலும் “கடல் வர்த்தகத்தில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும், கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம்…

மேலும்...

பாஜகவின் இரட்டை வேடம் – சிவசேனா தாக்கு!

புதுடெல்லி (08 ஆக 2021): டெல்லியில் ஒன்பது வயது தலித் பெண் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது. தெற்கு டெல்லியின் ஓல்டு நன்கால் கிராம பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி. கடந்த வாரம் அதிகாலை 5.30 மணி அளவில் தண்ணீர் பிடிப்பதற்காக அருகேயுள்ள சுடுகாடு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தண்ணீர் குழாய் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் அந்த சுடுகாட்டில்…

மேலும்...

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு திடீர் நீக்கம்!

புதுடெல்லி (07 ஆக 2021): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுமியின் பெற்றோரின் படத்தை பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் வாகனத்தில் சிறுமியின் பெற்றோர் உடனான உரையாடலில் பெற்றோரின் முகங்களை தெளிவாக வெளியிட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராகுல் சர்சைக்குரிய ட்விட்டை பகிர்ந்தற்காக, ராகுலுக்கு எதிராக டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்தது. ராகுல் காந்திக்கு…

மேலும்...

அயோத்தி ராமர் கோவில் திறப்பு எப்போது தெரியுமா?

லக்னோ (04 ஆக 2021): அயோத்தியில் ராமர் கோவில் வரும் 2023 ஆம் ஆண்டு திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இந்துத்வாவினரால் இடிக்கப்பட்டது. மேலும் அங்கு ராமர் கோவிலை கட்டுவதற்கு ஆர்.எஸ்.எஸ். பாஜக உள்ளிட்ட இந்துத்வாவினர் முழுமூச்சாக இருந்தனர். எனினும் பாபர் மசூதி இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்றும் மசூதி முஸ்லிம்களுக்கே சொந்தம் என்றும் முஸ்லிம்களால் தொடரப்பட்ட வழக்கு உச்ச…

மேலும்...

காங்கிரசில் இணைகிறாரா பிரசாந்த் கிஷோர்?

புதுடெல்லி (29 ஜூலை 2021): தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிராசில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் பிரசாந்த் கிஷோர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. ஜூலை 22 ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த சந்திப்பு நடைபெற்றது, மூத்த தலைவர்களான கமல்நாத், மல்லிகார்ஜூன் கார்கே, ஏ.கே. ஆண்டனி, அஜய் மேக்கன், ஆனந்த் சர்மா, ஹரிஷ் ராவத், அம்பிகா சோனி…

மேலும்...

நீதிபதி மரணத்தில் மர்மம் – சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!

ஜார்கண்ட் (29 ஜூலை 2021): ஜார்கண்ட் நீதிபதி டெம்போ வேன் மோதி கொல்லப்பட்டது தொடர்பாக பார்கவுன்சில் சிபிஐ விசாரணை கோரியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் புதன்கிழமை காலை நடைபயிற்சி செய்தபோது அவர் மீது வேகமாக வந்த டெம்போ வேன் மோதியது. இதில் படுகாயம் அடைந்த நீதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான , சி.சி.டி.வி காட்சிகள் குறித்த விசாரணையில் இந்த சம்பவம் விபத்து அல்ல, வேண்டுமென்றே நடந்திருக்கலாம், என்பதைக் குறிக்கிறது….

மேலும்...
Rahul and Modi

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் – ராகுல் காந்தி சாடல்!

புதுடெல்லி (28 ஜூலை 2021): பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தேச துரோக செயல் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான அவசர கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி ‘பணவீக்கம், பெகாசஸ் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்களில் நாங்கள் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. நாங்கள் சபையில் விவாதம் நடைபெறுவதை விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி குரல் நசுக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடக்கிறது….

மேலும்...

காஷ்மீர் கனமழையால் 5 பேர் பலி பலரை காணவில்லை!

ஜம்மு (28 ஜூலை 2021): காஷ்மீரில் பெய்து வரும் பெருமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர், 40 க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் ஹொன்சார் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டி தீர்த்தது. இதில், அம்மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்; 40க்கும் அதிமானோர் மாயமாகியுள்ளனர். மேலும், 8 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, ஹொன்சார் மாவட்டத்திற்கு…

மேலும்...

22 மாவட்டங்களில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு!

புதுடெல்லி (28 ஜூலை 2021): இந்தியாவில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 132 நாட்களுக்கு பிறகு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது… அதேசமயம் 22 மாவட்டங்களில் மட்டும் கொரோனா தினசரி பாதிப்பு 100க்கும் கீழ் பதிவாகியுள்ளது.. இதில் 7 மாநிலங்களில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து…

மேலும்...