மோடியும் சீனாவுடனான உறவும்!

Share this News:

2020, ஜூன் 15 அன்று இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் சீன இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இந்தியாவின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் தன்னுடைய இராணுவ முகாம்களை சீனா ஏற்படுத்தியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு தனக்கு சொந்தமானது என்று சீனா அடம்பிடித்து வருகிறது. அடுத்தவர்களின் இடத்தை ஆக்கிரமிப்பதில், மும்முரமாக இருக்கும் சீனா இவ்வாறு செய்வதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய பிரதமர் மோடி மிகவும் கடுமையான முடிவுகளை எடுப்பார். சீனா-வுக்கு எதிராக சர்ஜிகல் ஸ்ட்ரைக்-ஐ ஆரம்பிப்பார். சீனாவின் கதி அதோ கதிதான் என்று இந்திய மக்களில் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இதற்கு மாற்றமாக மோடி மென்மையான போக்கையே கடைபிடித்தார். சீனாவிற்கு மிகப்பெரும் ஆப்பு வைக்கப் போகிறார் என்று எதிர்பார்த்தால் இறுதியில் சீன APP-களுக்குத்தான் ஆப்பு வைத்து தடைவிதித்தார்.

இத்தகைய சந்தர்ப்பத்தில், மோடிக்கும் சீனா-வுக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டது? என்பதை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

முதன்முதலாக சீனா-வுடன் மோடி தொடர்பு ஆரம்பித்தது எப்போது..? சீனா-வுடனான நெருங்கிய தொடர்பை மோடி ஏற்படுத்திக் கொண்டது ஏன்..? சீனா-வுடன் மோடியின் நெருக்கத்துக்கு காரணம் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கு கிங்ஷூக் நாக் என்பவர் பதிலளிக்கிறார்.

இவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பணிபுரியக்கூடியவர். சிறநத அரசியல் அறிக்கைக்கான “பிரேம் பாடியா அவார்ட்” எனும் விருதைப் பெற்றவர்.பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.அவற்றில் விஜய் மல்லையா, மோடி, நேதாஜி, வாஜ்பாய், மோகன் பகவத் போன்றவர்கள் பற்றிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

“தி நமோ ஸ்டோரி” என்ற மோடியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கிங்ஷ_க் நாக் இவ்வாறு கூறுகிறார் :

2002-இல் குஜராத்தில் மிகப் பெரும் இனசுத்திகரிப்பு அராஜகப் படுகொலைகள் நடைபெற்றன. அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தவர் மோடி. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கர்ப்பிணிகள் என ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். குறிப்பாகப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யபப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மோடியின் குஜராத்தில் நடைபெற்ற இந்த இனஅழிப்பு நடவடிக்கைக்காக அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளும் மோடிக்கு விசா அளிக்க மறுத்துவிட்டன. இந்நிலையில் மோடி (வேறுவழியில்லாமல்) சீனா மற்றும் ஜப்பானுடன் 2009-இல் தொடங்கி நெருக்கமான உறவை பேணி வர ஆம்பித்தார்.

(2002 இனஅழிப்பு நடவடிக்கை தொடர்பான) மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டி இருபெரும் நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன்) அவரை ஒதுக்கி வைத்திருந்த நிலையில் ‘கிழக்கு நோக்கி” (சீனா, ஜப்பான்) திரும்ப வேண்டியது மோடிக்கு அவசியமாகிவிட்டது.

சீனா-வுக்கு குஜராத்துடன் கைகுலுக்கிக் கொள்வதில் எந்த பிரச்னையும் இருக்கவில்லை. குஜராத் அரசு அதிகாரி ஒருவர், இது தொடர்பாக கிங்ஷூக் நாக்-குடன் தனது கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

திபெத், ஜிங்ஜியாங் ஆகிய பகுதிகளில் உள்ள சிறுபான்மையினரின் (பவுத்தர்கள் மற்றும் உய்க்குர் முஸ்லிம்கள்) நிலையும் குஜராத்தில் உள்ள சிறுபான்மையினரின் (முஸ்லிம்கள்) நிலையும் ஏறக்குறைய ஒன்று போல் கணிக்கப்பட்டு அவர்கள், புறக்கணிக்கப்பட்டதாக இருக்கிறது.

திபெத்திலுள்ள பவுத்தர்களை சீனா சொல்லலொண்ணா துயரத்துக்கு ஆட்படுத்தியது. பவுத்த துறவி தலாய்லாமா உயிர் பிழைக்க நாடி இந்தியா தப்பி வந்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் தந்து பாதுகாத்தது. தலாய் லாமாவை தன்னிடம் ஒப்படைக்க சீனா வலியுறுத்தியது. ஆனால் மனித நேய அடிப்படையில் இந்தியா அதை மறுத்தது. அதிலிருந்துதான் சீனா-வுக்கும் இந்தியா-வுக்கும் பகை முற்றிக் கொண்டது.

சீனாவின் ஜிங்ஜியாங்க் மாகாணத்திலுள்ள உய்க்குர் முஸ்லிம்களின் நிலையும் மிக மோசமானது. இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அங்கு சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது உய்க்குர் முஸ்லிம்களின் பிறப்பை கட்டுப்படுத்துவதற்காக அங்கு முஸ்லிம் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை செய்யப்படுகிறது)

மேலும் மோடியின் வரலாற்றை பதிவதற்காக பல்வேறு நபர்களை சந்தித்திருக்கிறார் கிங்ஷூக்! அந்த வகையில் குஜராதைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை சந்தித்து விவரம் கேட்டிருக்கிறார். அந்த அரசு அதிகாரி தன் பெயரை வெளிப்படுத்த மறுத்த அவர்,கிங்ஷூக் நாக்-கிடம் உரையாடும்போது, சீனா-வுக்கு ஒரு தியான்மென் சதுக்கம் (அரசாங்கத்துக்கு எதிராக சீனா-வின் தியான்மென் சதுக்கத்தில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் பலரையும் சீன இராணுவம் சுட்டுக்கொன்றது) என்றால் மோடிக்கு 2002 (முஸ்லிம் இன அழிப்பு நடவடிக்கை).

சீனாவில் லிபரல் மீடியா எனும் பரந்த மனப்பான்மையுடன் செயல்படக்கூடிய ஊடகம் இல்லை. அனுமதியும் கிடையாது. அரசாங்கத்தை கேள்வி கேட்க யாருமில்லை. எதிர்ப்புக்குரல்கள் தோன்றுவதில்லை. இப்படி குஜராத்-துக்கும் சீனா-வுக்கும் பல பொருத்தங்கள் இருப்பதால் இயல்பாகவே இவ்விரண்டு நாடுகளும் நெருங்கி வந்ததில் வியப்பேதும் இல்லை.

குஜராத் அரசு அதிகாரி கூறியதை மீண்டுமொருமுறை படித்துப்பாருங்கள். அடக்குமுறைப் போக்கும், சிறுபான்மையினரை சித்திரவதை செய்து சிதைக்கும் தன்மையில் தான் இரண்டும் ஒத்துப் போகின்றன. அதில் அவர் பதிவுசெய்யும் கருத்து, சீனாவும் குஜராத்தும் கொஞ்சி குழாவியதற்கு காரணம் மனித நேயமோ, நற்பண்பன்புகளோ அல்ல. மாறாக சர்வாதிகாரம்., அடக்குமுறை ஆணவம், அதிகார செருக்கு..!

ஆதாரம் : மருதன் அவர்களின் குஜராத்-இந்துத்துவம்-மோடி


Share this News: