பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்!

Share this News:

புதுடெல்லி (09 ஆக 2021): ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக ஐக்கிய நாடுகள் சபை கவுன்சில் நடைபெற்றது.

இதில் தலைமை தாங்கி பேசிய மோடி, “கடல்சார் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பயங்கரவாத சக்திகளை எதிர்த்துப் போராட, கூட்டு ஒத்துழைப்பு தேவை!” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் “கடல் வர்த்தகத்தில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும், கடற்கொள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தும் கடல் வழித்தடங்கள் மீண்டும் கைப்பற்றப்பட வேண்டும் என்றும், நாடுகளுக்கிடையேயான மோதல்கள் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும்” என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பாதுகாப்புக் கவுன்சிலின் கூட்டத்திற்கு இந்திய பிரதமர் தலைமை தாங்குவது இதுவே முதல் முறையாகும்.


Share this News:

Leave a Reply