காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் நாம் தமிழரைவிட மோசமாக இருக்கும்: சீமான்!

Share this News:

அருப்புக்கோட்டை (18 ஜன 2020): காங்கிரஸ் திராவிட கட்சிகளை விட்டுப் பிரிந்து போட்டியிட்டால் நாம் தமிழரை விட மோசமான வாக்குகளை பெறும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர்.

ராஜீவ் படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்து அருப்புக்கோட்டையில் தனது தாயுடன் தங்கியுள்ளார். அவரை சீமான் சந்தித்து பேசினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேர் விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி மீண்டும் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி நோட்டாவுடன் மட்டுமே போட்டி போட முடியும் என காங்கிரஸ் எம்பி தெரிவித்திருந்தார்.

நாங்கள் தனித்து தேர்தலில் நின்று 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால் காங்கிரஸ் கட்சியோ 40 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மீது குதிரையேறியே தேர்தலை சந்தித்துள்ளனர். தனித்து நின்றால் நாங்கள் பெறும் வாக்குகளை விட அவர்கள் குறைவாகவே பெறுவர் என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply